விவசாயிகளுக்கு ஓய்வூதியம் மோடி துவக்கி வைத்தார்

விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி துவக்கிவைத்தார். 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் 18 முதல் 40 வயது வரை உள்ள சிறுகுறு விவசாயிகள் இந்ததிட்டத்தில் இணைய முடியும். 60 வயதை கடந்த பின், விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்கப்படும்.
பிரதமர் மோடி பேசியதாவது: இந்ததிட்டத்திற்காக 10,774 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட விவசாயிகளுக்கான பென்சன் திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். ஜார்க்கண்டில், 8 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். ஜார்க்கண்ட் மக்கள், புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடி நீர் வழங்க உறுதிபூண்டுள்ளோம்.

பழங்குடியினரின் வளர்ச்சிக்காக பல பெரும் திட்டங்களை கொண்டுவர உறுதி பூண்டுள்ளோம், நாடு முழுவதும் பழங்குடியின மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 462 உண்டு உறைவிட பள்ளிகளை நிறுவியுள்ளோம்.

நாங்கள் ஆட்சிக்குவந்த 100 நாளில் முத்தலாக் சட்டத்தை ரத்துசெய்தோம். பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை வலுப்படுத்தி யுள்ளோம். பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை, அவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் வைத்துள்ளோம்.

பா.ஜ., ஆட்சி காலத்தில் ஜார்க்கண்ட் வளர்ச்சிபாதையில் செல்கிறது. தேர்தலுக்குபின் கூடிய பார்லிமென்ட் தொடர் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு சாதனை படைத்துள்ளது. நாட்டின் நலனுக்காக பலமுக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. காஷ்மீரில் வளர்ச்சியை கொண்டு வருவோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...