புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு கார்ப்பரேட்வரி விகிதம் குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கோவாவில் நிருபர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு வரிசலுகைகளை அறிவித்தார். பொருளாதார மந்தநிலையால் இந்த சலுகைகளை அறிவித்தார்.
நிர்மலா சீதாராமன் கூறியதாவது: உள்நாட்டு நிறுவனங்களுக்கும், புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங் களுக்கும் கார்ப்பரேட் வரிகளை குறைக்க திட்டமிடப் பட்டுள்ளது. 2023-ம் ஆண்டுவரை இந்த சலுகைகள் நிறுவனங்களுக்கு கிடைக்கும். கார்ப்பரேட்வரி அடிப்படையில் நாம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இணையாக இருக்கிறோம்.
வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, 2019-20 நிதியாண்டு ஏப்., 1 முதல் நடைமுறைக்குவரும் வகையில் வருமான வரிச் சட்டத்தில் ஒருபுதிய சட்டபிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. எந்தவொரு உள்நாட்டு நிறுவனமும் 22 சதவீதம் என்ற விகிதத்தில் வருமானவரி செலுத்த அனுமதிக்கிறது. அவை எந்தவொரு ஊக்கத் தொகையும் விலக்குகளும் பெறாது.
மேக் இன் இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் அதிக முதலீடுகளைச்செய்ய விரும்புகிறோம். இதனால் பொருளாதாரம் வலுப்பெறும். நடப்பு நிதியாண்டில் நடைமுறைக்கு வரும்வகையில் வருமான வரிச்சட்டத்தில் மற்றொரு சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இது அக்.,1க்கு பிறகு தொடங்கப்படும் எந்தவொரு புதிய உள்நாட்டு நிறுவனத்தையும் தொடங்குவதில் புதியமுதலீட்டுக்கு 18 சதவீதத்தில் இருந்து 15 சதவீத வரி மட்டும் செலுத்தினால் போதும்.
ஊக்கத்தொகை அல்லது விலக்குகளைத் தொடர்ந்துபெறும் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க, அவர்களுக்கு நாங்கள் குறைந்தபட்ச மாற்றுவரி (MAT) நிவாரணம் அளிக்கிறோம். தற்போதுள்ள வரி 17.01 சதவீதமாக குறைக்கபட்டுள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |