70 வயதை கடந்தவர்களுக்கு எந்த ஒருதேர்தலிலும் சீட் வழங்ககூடாது என்பது பாஜக வின் கட்சி கொள்கைளில் ஒன்றாக உள்ளது. இதில் மாநிலஅரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடலாம் எனவும் கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அரியானா மாநிலத்தை பொறுத்த வரையில் 90 சட்டசபை இடங்கள் உள்ளன. இத் தேர்தலில் தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் பலர் தங்களின் வாரிசுகளை களம்இறக்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலா , மாநில தலைமையகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்ட கூட்டத்தில் வாரிசு அரசியலை ஊக்குவிக்க கூடாது என்பதை தெளிவு படுத்தி உள்ளனர்.
இதனையடுத்து 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தங்களின் வாரிசுகளுக்கும் சீட்வழங்கப்பட மாட்டாது. இதுவரையில் யாரும் இந்த விதி முறையை மீறவில்லை. அதேநேரத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ள பெண் வேட்பாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் கூறினார்.
விரைவில் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் வெளியிடப்படும் எனவும் அந்த பட்டியலில் அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோரின் பெயர் இருக்கும் . மேலும் காங்கிரஸ், இந்திய லோக்தேசிய லோக் தள் கட்சியை போன்ற சாதி அரசியலை தவிர்த்து அனைத்து பிரிவுகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.