அம்மன் வடிவம் : மகேஸ்வரி
பூஜையின் நோக்கம் : மது கைடவர் என்ற அசுரனை வதம்புரிதல்
மகேஸ்வரியின் வடிவம் : திரிசூலமும், பிறைசந்திரன் மற்றும் அரவமும் தரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளி யிருப்பவள் மகேஸ்வரி.
சிவ பெருமானுடைய பத்தினி மகேஸ்வரி.
மூவகை குணங்கள் :
1. சாத்வீக குணம் : சாத்வீககுணம் உடையவர்கள் தவம், கல்வி, தியானம், இரக்கம், மகிழ்ச்சி, பெருமை, அடக்கம் ஆகியன நிறைந் திருப்பார்கள்.
2. தாமசக் குணம் : தாமசக் குணம் உடையவர்கள் சோம்பல், அறியாமை, அதர்மம், மந்த புத்தி, தூக்கம் ஆகியன நிறைந்திருப்பார்கள்.
3. இராட்சத குணம் : இராட்சத குணம் உடையவர்கள் கோபம், அகங்காரம், மூர்க்கத்தனம் ஆகியன நிறைந்திருப்பார்கள்.
அளவிடமுடியாத பெரும் சரீரம் கொண்டவள். மகேஸ்வரியை மஹீதி என்றும் அழைப்பார்கள்.
மகேஸ்வரி சகல சௌபாக்கியத்தையும் அளிக்கக்கூடியவள்.
தென்நாட்டில் முதல் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் வனதுர்க்கை ஆகும்.
வனதுர்க்கை என்றால் வனத்தில் குடிகொண்டவள் என்பது பொருளல்ல. இந்த பிரபஞ்சத்தில் பிறந்த அனைத்து உயிர்களும் வாழ்க்கை என்னும் வனத்தில் அகப்பட்டு வெளிவர முடியாமல் தவிக்கின்றவர் ஆவார்.
எனவே, தேவியின் திருவுருவமான வனதுர்க்கையை நினைத்து வழிபடுவதால் வனத்தில் உள்ள அடர்ந்த இருளைப் போக்கி நம்மை செழுமைப்படுத்துகிறார்.
அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : மல்லிகைப்பூ மாலை
அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : வில்வம்
அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : சிவப்பு
அன்னையின் அலங்காரத்திற்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : சிவப்புநிற பூக்கள்
கோலம் : அரிசி மாவால் புள்ளி கோலம் போட வேண்டும்.
நைவேத்தியம் : வெண்பொங்கல்
குமாரி பூஜையில் உள்ள குளத்தின் வயது : 2 வயது
குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள் : இன்னல்கள் நீங்கும்.
பாட வேண்டிய ராகம் : தோடி
பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி : மிருதங்கம்
குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : சுண்டல்
பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும். மகிழ்ச்சியுடன் நீண்ட ஆயுள் வாழ்வார்கள்.
வடகிழக்கு என கூறப்படும் ஈசானியம் திசையை நிர்வாகம் செய்பவள் மகேஸ்வரி. இவள், அம்பாளின் தோளில் இருந்து அவதரித்தவள். இவளது வாகனம் ரிஷபம் ஆகும். ஈஸ்வரன் நிகழுத்தும் சம்ஹாரங்கள் அனைத்தும், இந்தமகேஸ்வரி சக்தியால்தான் செய்கிறார் என்பதே, இந்த அன்னையின் ஆற்றலை வெளிப்படுத்தும் சான்று. சப்தமாதரில் ஒருவரான இவரை வழிபட்டு வந்தால், நமது கோபத்தை அகற்றி, சாந்தம் அளிப்பாள்.
‘ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்’
என்ற காயத்ரி மந்திரத்தை வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து, 108 முறை பாராயணம் செய்து வந்தால், கோபம் நீங்கி, சாந்தம் பெறலாம்.
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |