அமெரிக்காவில் பலதரப்பட்ட வர்களுடன் உரையாடினேன். இந்திய இளைஞர்களின் திறமைக்கு பின்னால் ஐஐடி போன்ற கல்விநிறுவனங்கள் உள்ளன. இந்தியாவின் இளைய தலை முறையினரின் நம்பிக்கையை கண்டு உலகத்தலைவர்கள் பிரமிக்கின்றனர்.
இந்தியர்களின் முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கையை கண்டு உலகமே வியக்கிறது. உலகின் மூத்தமொழியான தமிழ்பேசும் மாநிலத்தில் நாம் இருக்கிறோம். சிறந்த மாணவர்களாக மட்டுமல்லாமல் சிறந்த குடிமக்களாகவும் இருக்க வேண்டும்.
ரோபோட்டிக் உள்ளிட்ட நவீனதொழில்நுட்ப பிரிவுகளில் மாணவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். புதுமைக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் ஐஐடி சென்னை சிறந்து விளங்குகிறது.
உலகின் டாப் 3 ஸ்டார்ட் அப் கண்டுபிடிப்புகளில் இந்தியா இடம்பெற்றுள்ளது. கடின உழைப்பால் முடியாததையும் முடியக்கூடியதாக மாற்றும் ஆற்றல் மாணவர்களுக்கு உண்டு. முயற்சி, திறமை, அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட வர்களுக்கு சரியான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. வாழ்க்கை முறை நோய்கள்தான் எதிர்காலத்தில் ஆரோக்கிய குறைபாட்டை ஏற்படுத்துவதாக உள்ளன.
தண்ணீரை சுத்திகரித்து மறு உபயோகப் படுத்தும் வழிகளை கண்டுபிடிப்பது அவசியம் ஆகும். மருந்துக்கு எப்படி காலாவதிதேதி இருக்கிறதோ அது போலவா மனித வாழ்க்கையும் என யோசிக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் .
சென்னை ஐஐடியின் 56-ஆவது பட்டமளிப்பு விழாவில் . பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுபேசியது.