மகாராஷ்டிரா சட்ட சபை தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா நடுவே தொகுதிப்பங்கீடு இன்று இறுதிசெய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவ சேனாவை ஒப்பிட்டால், பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அக்டோபர் 21ம் தேதி நடக்க உள்ள இந்ததேர்தலில், பாஜக, சிவசேனா மற்றும் சிலகட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இன்று, மும்பையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தொகுதிபங்கீடு தொடர்பான விவரத்தை வெளியிட்டனர்.
இதன்படி பாஜக 148 தொகுதிகளில் போட்டி யிடுகிறது. சிவசேனா 126 தொகுதிகளில் களமிறங்குகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. “இருகட்சிகள் நடுவேயும் சில வேறுபாடுகள், கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் கூட இந்துத்துவா என்ற ஒற்றை நூலில் இவ்விரு கட்சிகளும் இணைந்துள்ளன” என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
யார் பெரியவர், யார் அண்ணன், யார் தம்பி என்று விவாதித்துக் கொண்டிருப்பதைவிட, நாங்கள் சகோதரர்களாக இருக்கிறோம் என்று சொல்வதுதான் முக்கியமானது. நாங்கள் சகோதரர்களாக இணைந்து செயல்படுவோம்” என்றார் அவர்.
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |