பீகார் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானவர் மூத்தவழக்கறிஞரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராம்ஜெத்மலானி. இவர் கடந்த மாதம் 8-ம் தேதி காலமானார்.
இதையடுத்து, பீகாரில் காலியாக உள்ள ராஜ்யசபா இடத்துக்கு அக்டோபர் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தள்ளது. இதில் பாஜக சார்பில் சதீஷ்சந்துரு துபே போட்டியிடுகிறார்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் காலியாக உள்ள ராஜ்ய சபா இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் சதீஷ் சந்துருதுபே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியிடம் இருந்து இன்று பெற்றுக்கொண்டார்.
ஏற்கனவே, உத்தர பிரதேசம் மாநிலத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் சுதான்ஷு திரிவேதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |