அஸ்ஸாமில் 4 சட்ட சபை தொகுதிகள் இடைத் தேர்தலில் பாஜக ஏற்கனவே வென்ற 3 தொகுதிகளைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது நாடுமுழுவதும் பெரும் விவாதத்துக்குள்ளான தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரமானது பாஜகவின் வெற்றியை எந்தவகையிலும் பாதிக்கவில்லை என்பதை இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
அஸ்ஸாமில் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துவந்தது. இதை கட்டுப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப் படுத்தப்பட்டது.
இதன்படி சுமார் 90.00.000 லட்சம்பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் அஸ்ஸாமில் குடியேறி இருப்பது தெரிய வந்தது. இதுநாடு முழுவதும் பெரும் விவாதத்துக்குரியதாக மாறியது. பல்வேறு மாநிலங்களிலும் சட்டவிரோத குடியேறிகளைக் கட்டுப்படுத்த இதை நடைமுறைப் படுத்தப் போவதாக அறிவித்தன.
அதேநேரத்தில் சிறுபான்மை யினருக்கு எதிரான பாஜகவின் நடவடிக்கை என அரசியல் ரீதியாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டன. இந்நிலையில் அஸ்ஸாமின் ரதாபாரி, சோனாரி, ரங்காபாரா மற்றும் ஜனியா ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அக்டோபர் 21-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் எதிரொலிக்கும் என கூறப்பட்டது.
இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 20 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் ரதாபாரி, சோனாரி, ரங்காபாரா ஆகிய 3 தொகுதிகளையும் பாஜக தக்கவைத்துள்ளது. ஜனியா தொகுதியை ஏ.ஐ.யூ.டி.எப்- இடம் காங்கிரஸ் பறிகொடுத்திருக்கிறத
ரதாபாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரைவிட சுமார் 10,000 வாக்குகள் முன்னணியில் இருக்கிறார் பாஜகவின் பிரேந்திர ரபிதாஸ். ரங்காபாரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரைவிட பாஜகவின் ராஜேன் போர்தாகூர் சுமார் 28,000 வாக்குகள் முன்னணியில் உள்ளார். சோனாரிதொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட பாஜகவின் நபிந்தா ஹண்டிஹ் சுமார் 2,000 வாக்குகள் முன்னணியில் உள்ளார். ஜனியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 10,000 வாக்குகள் பின் தங்கி உள்ளார். பொதுவாக தேசியகுடிமக்கள் பதிவேடு விவகாரம் பாஜகவுக்கு அஸ்ஸாமில் பின்னடைவை தரவில்லை. கை கொடுத்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.