காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டுபிரச்னை. அதில் நாங்கள் தலையிட போவதில்லை, காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டுவிவகாரம். இந்திய அரசியலில் நாங்கள் தலையிட முடியாது. நிலையில்லாத தன்மையும், பயங்கரவாதமும்தான் காஷ்மீரில்வாழும் அப்பாவி மக்களின் பெரியபிரச்னையாக உள்ளது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
காஷ்மீரில் உள்ள அனைத்து பிரச்னைகளும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது. காஷ்மீர் அல்லாத 5 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதும் பயங்கர வாதத்தால்தான். துரதிஷ்ட வசமான அந்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். பயங்கரவாதம் இந்தியாவின் பிரச்னை அல்ல. அது உலகநாடுகள் அனைத்தும் எதிர்கொண்டு வரும் பிரச்னை. பயங்கர வாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் நாங்கள் இந்தியாவின் பக்கம் இருப்போம்.
போலீசும், ராணுவமும் பலமுயற்சிகள் எடுத்தும் பாக்., தொடர்ந்து பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பிவருகிறது. இந்த நிலையற்ற சூழலால் காஷ்மீர் இன்னும் பின்தங்கி உள்ளது. காஷ்மீர் மற்றொரு ஆப்கான் ஆவதை நாங்கள் விரும்ப வில்லை. இந்திய அரசியலில் தலையிட நாங்கள் விரும்ப வில்லை.
சாமானியமக்களை சந்திக்கவே வந்தோம். காஷ்மீர் மக்கள் வளர்ச்சியையும் அமைதியையுமே விரும்புகிறார்கள். அவர்களின் வளர்ச்சிக்கு நாங்கள் துணைநிற்போம். அவர்கள் பள்ளிகள், மருத்துவ மனைகளை விரும்பு கிறார்கள்.
காஷ்மீரை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் ஐரோப்பிய எம்.பி.,க்கள் பேசியது.
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |