ரியல் எஸ்டேட் துறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடவடிக்கைகள் வலுப்பெறும்

ரியல் எஸ்டேட் துறையை சீர்திருத்தும்வகையில் ரூ. 25,000 கோடி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் அறிவித்து இருக்கிறார்.

மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குபிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சிலமுக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

ரியல் எஸ்டேட் துறையில் நிலவும் பிரச்னைகளை தீர்க்க மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 1,600 திட்டங்களில் கட்டப்பட்டுவந்த 4.58 லட்சம் வீடுகள் முடங்கி இருக்கின்றன.

அந்ததிட்டங்கள் பலகட்ட நிலைகளில், முடிக்கப்பட முடியாமல் பாதியில் உள்ளன. அவற்றை தீர்ப்பது குறித்து, அரசு, ரிசர்வ் வங்கியுடன் தீவிரவாக ஆலோசித்து வருகிறது.

அதன்படி நிறைவடையாமல் இருக்கும் கட்டுமான திட்டங்களுக்கு சிறப்புநிதி தொகுப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ரியல்எஸ்டேட் துறையை புத்துயிராக மாற்ற ரூ. 25,000 கோடி ஒதுக்கப்படும்.

முதல் கட்டமாக ரூ.10,000 கோடி விடுவிக்கப்பட இருக்கிறது. அதற்காக ரிசர்வ்வங்கி, வீடு வாங்குபவர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருடன் ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. ரியல் எஸ்டேட் துறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடவடிக்கைகள் வலுப்பெறும் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...