டில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் உண்டு. கற்றுத் தெளிய வேண்டிய, வலுவான மனித சக்தியாக உருவாக வேண்டிய பள்ளி, கல்லூரிகளில் போராட்டங்களே படமாகலாமா?, போராட்டங்களை தூண்டும் விஷம கருத்துக்களே கல்வியுமாகலாமா?. ஆனால் கடந்த சில வருடங்களாக நாட்டிலே மிக உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் (ஜெ.என்.யு) இதுவே நிலை.
பல கல்வியாளர்களை, பொருளாதார வல்லுநர்களை, அரசியல் தலைவர்களை, பல துறை வித்தகர்களை உருவாக்கிய, கல்வி நிறுவனம், கடந்த சில வருடங்களாக பிரிவினை பேசும், ஜன நாயக விரோத கருத்தாக்கத்தை விதைக்கும் ஸ்தாபனமாகவே மாறி வருகிறது. அதன் தாக்கம் தான் கடந்த 2016 ம் ஆண்டு பாராளுமன்ற தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதி அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற பட்டதை கண்டித்து, தேசத்துக்கு எதிராக கல்லூரிக் குள்ளேயே கருத்தரங்கம் நடத்தியதும் , அதனை தொடர்ந்து காஸ்மீர் மாணவர்களுடன் மேலும் பல மாணவர்கள் இணைந்து போராடியதும், இதில் இந்தியாவுக்கு எதிராக மாணவர்கள் பேசிய விஷம கருத்த்துக்களும், அதில் கன்னையா குமார் என்ற மாணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டத்தும். பின்னாளில் இதையே ஒரு தகுதியாக கொண்டு கம்யூனிஸ்ட்கள் அவருக்கு தங்கள் கட்சியில் மிக் உயரிய பொறுப்பை வழங்கியதும் வரலாறு.
தேசத்துக்கு எதிராக பேசுவதும், சிறு பிரச்சனைகளுக்கு பெரும் போராட்டங்களாக முன்னெடுப்பதும் வழக்கமாகி வருகிறது. இதன் ஒரு பகுதிதான் சமீபத்திய நிகழ்வுகள் . கல்லூரி நிர்வாகம் சமீபத்தில் மாணவர்களின் விடுதியில் இருவர் தாங்கும் அறைக்கான வாடகையை 10இல் இருந்து 300 ஆகவும், ஒருவர் தங்கும் அறைக்கான வாடகை 20இல் இருந்து 600 ஆகவும், மாதாந்திர மின்சார, தண்ணீர்க்கான சேவை கட்டணங்களாக 1700யும், உடை கட்டுப்பாடுகளையும், விடுதிகளில் ஒழுங்கீனங்களை களைய நேர கட்டுப்பாடுகளையும் விதித்தது.
வருடத்துக்கு மத்திய அரசு ரூ 250 கோடி வரை ஜெ.என்.யு.,க்கு ஒதுக்குகிறது. ஒரு மாணவருக்கு சராசரியாக வருடத்துக்கு 3 லட்சம் வரை செலவு செயகிறது . மாணவர்களிடம் இருந்து 10 கோடி வரை மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறது. இந்த குறைந்தபட்ச கட்டணம் கூட பொறுப்புணர்வை வளர்க்க தானே தவிர, அவர்களை துன்புறுத்த அல்ல. .உதாரணத்துக்கு மின்சார, தண்ணீர் கட்டணம் சிக்கனத்தை வலியுறுத்தும். மேலும் வறுமை மிகு மாணவர்களுக்கு சில சலுகைகளை அரசு உருவாக்கி தரவேண்டும் என்பதிலும் மாற்று கருத்துக்கு இடம் இல்லை.
இருப்பினும் இதை போன்றதொரு போராட்ட வடிவங்கள் மிகவும் ஆபத்தானது. இவைகள் பேராசிரியர்கள் , அறிவு ஜீவிகள் வடிவில் அங்கு நிலைபெற்று விட்ட சில தீவிர இடது சாரிகளாலும், நக்ஸல் சிந்தனையாளர்களாலும், பிரிவினை வாதிகளாலுமே உருப்பெறுகின்றன. கடந்த 20 வருடத்தில் காங்கிரஸ் அரசின் துணையுடன் பல வழிகளில் ஊடுருவிட்ட இவர்களை கலையெடுப்பதன் மூலம் மட்டுமே உண்மையான தேச பக்தி கொண்ட மாணவ சமூகத்தை படைக்க முடியும். தேச பக்தியை விட பெரியது வேறொன்றுமில்லை .
நன்றி;- தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ்
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |