எதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை

பிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானத்தை வாங்கிய ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துவிட்டதாக, ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவந்த பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.ஒரு பொய்யை  திரும்ப திரும்ப சொல்வதன்  மூலம் உண்மையாக்கி விடலாம் என்கிற ராகுலின் கனவில் மண் விழுந்துள்ளது.

 

2014 ஆம் ஆண்டு மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பொழுது நாட்டின் பாதுகாப்பு பல வழிகளிலும் பலவீனப்பட்டே இருந்தது. அது உட்கட்டமைப்பிலா?, ஆயுத தளவாடங்களிலா? என்றாள் இரண்டிலுமே எனலாம்.

உள்கட்டமைப்பிலோ முக்கிய பாதுகாப்பு கேந்திரங்கள் பலவற்றில் போர் விமான தளங்கள் இல்லை, இந்திய-சீன எல்லைகள் எங்கும் சரியான சாலைகள் இல்லை, ராணுவத்தையோ ஆயுதங்களையோ விரைவில் கொண்டு செல்ல முடியாத நிலைதான் இருந்தது. ஆனால் இன்று அந்தக் குறைகள் களையப்பட்டு விட்டது.

பாதுகாப்பு தளவாடங்களிலோ ராணுவத்துக்கு தேவையான காலணிகள் கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. உயிர்காக்கும் குண்டுதுளைக்காத கவச ஆடைகளை கூட விரைவில் கொள்முதல் செய்து கொடுக்கும் நிலை இங்கு இல்லை. ஆனால் இன்று நிலைமை சீரடைந்து விட்டது. . மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இவைகள் எல்லாம் இன்று இந்தியாவிலேயே உற்பத்தியாகிறது .

அதேபோன்று ஆயுதங்களிலும் பற்றாக்குறை, வெடி மருந்துகளிலும் பற்றாக்குறை, போர் விமானங்களில் பற்றாக்குறை, கூடிக்கொண்டே வந்த காலாவதி போர் விமானங்களின் எண்ணிக்கை எல்லாம் இந்திய பாதுகாப்பை ஒரு இக்கட்டான நிலையிலேயே வைத்திருந்தது.

காரணம் முந்தைய காங்கிரஸ் அரசியல் ஆயுதக் கொள்முதலில் காணப்பட்ட ஆதாய தாமதங்களும், சாத்தியமற்ற ஒப்பந்தங்களுமே.. உதாரணத்திற்கு ரஃபேல் போர் விமானத்தை வாங்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்யவே முந்தைய காங்கிரஸ் அரசுக்கு 10 வருடம் (2001-2012) தேவைப்பட்டது. ஒரு ரபேல் விமானத்தை 600 கோடி என்ற விதத்தில் 126 விமானங்களை 72000 கோடிக்கு கஜானாவில் காசே இல்லாமல் ஓப்பதம் போட்டார்கள்.

மேலும் விவிஐபி.,க்கான 12 சொகுசு  ஹெலிகாப்ட்டர்களை தலா ரூ 300 கோடி என்று 3200 கோடிக்கு மிகவும் நவீனம் நிறைந்ததாக வாங்க முற்பட்டவர்கள். மிகவும் மதிப்பு, சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டிய போர் விமானங்களை  தலா ரூ 600 கோடி மதிப்புக்கு சாதாரண தொழில்நுட்பத்தில் வாங்க முற்பட்டது எனோ?.  அதுவும் முப்பது, நாற்பது வருடம் கழித்தே கிடைத்திருக்கும்.. .

எனவேதான் பதவி ஏற்ற 2 வருடத்தில் புதிய ஒப்பந்தத்தை பிரதமர் நரேந்திர மோடியே பிரான்ஸ் அதிபருடன் நேரடியாக பேச்சு நடத்தி  இறுதி செய்தார். ஒரு விமானத்தின் விலை 1300 கோடி என்று 36 விமானங்களின் விலை 52000 கோடியாக இருக்கலாம். ஆனால் அது உச்ச பட்ச தொழில்நுட்பத்துடன் இந்த நூற்றாண்டுக்கான பாதுகாப்பு அம்சங்களை கொண்டது. உலகில் வேறு எந்த நாட்டுக்கும் தராத தொழில் நுட்பத்தை பிரான்சின் டசல்ட் ஏவியேஷன் நிறுவனம் தர பிரான்ஸ் அனுமதி தந்துள்ளது என்பதே இதன் சிறப்பு மதிப்பு. .

தாங்கள் நிர்ணயித்த விலையை விட இரண்டு மடங்கு விலை. இதில் ஊழல் நடந்துள்ளது. இல்லாவிடில்  இவ்வளவு மதிப்புக்கான இதன் சிறப்புகள் என்ன என்கிற ராகுலின், கேள்விக்கான பதிலை தான் சற்று பதற்றத்துடனே சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் தேடுகின்றன. இதன் உண்மை மதிப்பு இந்த நாடுகளுக்கு தெரியுமே ஒழிய!  எதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார்க்கும் ராகுலுக்கு, காங்கிரஷ்க்கு   தெரிய வாய்ப்பே இல்லை .

நன்றி தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ்  

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...