தேசிய குடிமக்கள் பதிவு எந்த மதத்துக்கு எதிராகவும் கொண்டுவர படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘தேசியகுடிமக்கள் பதிவு உச்சநீதிமன்றத்தால் கண்காணிக்கப்படுகிறது. எந்த மதத்தையும் குறிவைத்தோ, தனிமை படுத்துவதற்காகவோ தேசிய குடிமக்கள் பதிவு அமல்படுத்தப்பட வில்லை. தேசிய குடிமக்கள் பதிவு நாடுமுழுவதும் அமல்படுத்தப்படும்.
தேசிய குடிமக்கள் பதிவில் பெயர் இல்லாத வர்களுக்கு ஆணையத்தில் முறையிடுவதற்கு உரிமை உள்ளது. சட்டப் போராட்டம் நடத்துவது பொருளாதார உதவி இல்லாதவர்களுக்கு அசாம் அரசு உதவிசெய்வதற்கு தயாராக உள்ளது. எல்லா மதத்தை சேர்ந்தவர்களுக்கும் இந்த அரசு புகழிடம் அளிக்கும்’ என்று தெரிவித்தார்.
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |