தமிழ் மக்களுக்கு மரியாதை, சமநிலை, சமூக நீதி, அமைதி போன்ற நடவடிக்கைகளை கோத்தபயா மேற்கொள்வார் என நம்புகிறேன்”

இலங்கை அதிபர் கோத்த பய ராஜபக்சவுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்திய பின்னர், பிரதமர் நரேந்திரமோடி, இலங்கையின் உள்கட்டமைப்பு பொருளாதாரத்தை வலுப்படுத்த வெள்ளிக் கிழமை 400 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2,868 கோடி) அந்நாட்டிற்கு கடனாக வழங்குவதாக அறிவித்தார். மேலும், இலங்கை தீவிர வாதத்தை எதிர்த்துபோராட அந்நாட்டிற்கு உதவுவதற்காக 50 மில்லியன் டாலர் கூடுதலாக அறிவித்தார்.

ராஜபக்சவுடன் ஊடகங்களிடம் பேசிய பிரதமர் மோடி, இருநாடுகளும் ஒரு வலுவான பிணைப்பை பகிர்ந்துகொள்கின்றன. மேலும், ஒரு வலுவான இலங்கையானது இந்தியாவின் நலனில் மட்டுமல்ல, முழு இந்தியபெருங்கடல் பிராந்தியத்திலும் உள்ளது.

உங்களுக்கு (ராஜபக்சவுக்கு) வழங்கப்பட்ட ஆணை ஒருவலுவான நாட்டிற்கான இலங்கை மக்களின் விருப்பங்களின் வெளிப்பாடாகும். ஒருவலுவான இலங்கையானது இந்தியாவின் நலனில் மட்டுமல்ல, அது ஒட்டு மொத்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் உள்ளது”என்று மோடி கூறினார். மேலும், “இலங்கையும் இந்தியாவும் ஒருவலுவான பிணைப்பை பகிர்ந்துகொள்கின்றன. நம்முடைய முதல் அண்டை நாடுகள் கொள்கையின்கீழ் இலங்கையுடனான நம்முடைய உறவுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.” என்று கூறினார்.

இந்திய வீட்டுவசதி திட்டத்தின் கீழ், இலங்கையில் 46,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன, தமிழ்வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு 14,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. சூரிய சக்தி திட்டங்களுக்கு மேலும் 100 மில்லியன் டாலர் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று மோடி கூறினார்.

“இலங்கையில் நல்லிணக்கம் குறித்த எங்கள் கருத்துக்களை நாங்கள் பரிமாறிக் கொண்டோம். இலங்கை அதிபர் ராஜபக்ச, இனநல்லிணக்கம் குறித்த தனது அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் கண்ணோட்டத்தைப்பற்றி என்னிடம் கூறினார். சமத்துவம், நீதி, அமைதி மற்றும் தமிழர்களின் மரியாதை ஆகிய அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற இலங்கை அரசு நல்லிணக்க நடைமுறைகளை முன்னெடுக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று பிரதமர் மோடி இந்த மாநாட்டின் போது கூறினார்.

மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள கோத்தபய ராஜபக்ச, இந்தியா – இலங்கை இருதரப்பு உறவை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பேன் என்றார். பாதுகாப்பு மற்றும் மக்களின் ஒட்டுமொத்த நலன் தொடர்பான பிரச்சினைகளில் இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

“நாங்கள் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். பேச்சுவார்த்தைகளில் எங்களுடைய கவனம் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி இருந்தது.” என்று கூட்டாக பேசியபோது தெரிவித்தனர். “நான் அதிபராக இருக்கும் காலத்தில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மிகஉயர்ந்த மட்டத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். நமக்கு இடையே வரலாற்று ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நீண்டகால உறவுள்ளது.” என்றும் கோத்தபய ராஜபக்ச கூறினார்.

தொடர்ந்து பேசிய இலங்கை அதிபர் ராஜபக்ச இந்தியாவுக்கு சொந்தமான மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

கோத்தபய ராஜபக்ச 10 நாட்களுக்கு முன்பு இலங்கை அதிபராக பதவியேற்றபின்னர், இது அவருடைய முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணம். அவர் வியாழக்கிழமை இந்தியா வந்தார்.வெள்ளிக்கிழமை காலை குடியரசுத் தலைவர் மாளிகையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக் சவுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி அவரை வரவேற்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...