தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இருகட்டங்களாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இருகட்டங்களாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் இன்று புதியஅறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்நடத்த மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம்தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி 6ம் தேதியான நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 27ம் தேதியும், 2ம் கட்ட வாக்குப்பதிவு 30ம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு சிலமாதங்கள் கழித்து தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வார்டுவரையறை பணிகள் நடைபெறாததால் பிரிக்கப்படாத பழைய மாவட்டத்தின் அடிப்படையில் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதை எதிர்த்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந் திருந்தனர். அதில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்துசெய்ய வேண்டும் என்றும் தொகுதி மறுவரையறை, சுழற்சி முறை இடஒதுக்கீடு பணிகள் முடிந்த பிறகுதான் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிடவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஒருஅறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 4 மாவட்டங்களை பிரித்து 9 மாவட்டங்களை உருவாக்கியதன் அடிப்படையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உடனே தேர்தல்நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

இதற்காக பழையதேர்தல் அட்டவணையை ரத்துசெய்வதாகவும், புதிய தேர்தல் அட்டவணையை வெளியிட உள்ளதாகவும் கோர்ட்டில் தேர்தல்ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று நடைபெறஇருந்த வேட்புமனு தாக்கல் நடைபெற வில்லை. இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். எனவே, இன்று மாலை 4.30 மணிக்கு புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

தேர்தல் ஆணையர், பழனிச்சாமி கூறியதாவது:

* டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இருதேதிகளில் தமிழக உள்ளாட்சிதேர்தல் நடைபெறும்.

*காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 5 மணியுடன் நிறைவடையும்

*ஜனவரி 2ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும்

* நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் தேர்தல் நடக்கும்

* வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9ம் தேதிதுவங்கும்

* வேட்பு மனு பரிசீலனை டிசம்பர், 17ம் தேதி நடைபெறும்

* வேட்புமனு திரும்பப் பெற டிசம்பர் 19ம் தேதி கடைசி நாளாகும்

* முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 27ம் தேதி நடைபெறுகிறது

* இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 30ம் தேதி நடைபெறுகிறது

* மாவட்ட, ஒன்றிய குழு துணை தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் 2020, ஜனவரி 11ம் தேதி நடைபெறும்

*கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் இல்லை

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...