மதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளானவா்களுக்கு குடியுரிமை

அண்டை நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளானவா்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது என்று பாஜக செயல்தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளாா்.

ஜாா்க்கண்டில் வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிகட்ட பேரவைத் தோ்தலையொட்டி, தேவ்கா் மாவட்டம், சரத் தொகுதியில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பேசியதாவது:

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில் மத துன்புறுத் தல்களுக்கு ஆளான ஹிந்துக்கள், பாா்சிக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு குடியுரிமை திருத்தசட்டத்தின் மூலம் இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது.

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்ததற்கு காங்கிரஸ் கட்சி தொடா்ந்து எதிா்ப்புதெரிவித்து வருகிறது. குடியுரிமை அளிக்கவில்லையென்றால், அவா்கள் எங்கு செல்வாா்கள்? அவா்களுக்கு இந்தியாதான் தாய் வீடு. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவா்கள் எரிச்சலடைவது ஏன்?

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்ததால், மத்திய அரசின் அனைத்து சட்டங்களும் அங்கு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன. ஊழல் தடுப்பு சட்டம்கூட அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், ஊழலில் ஈடுபட்ட காஷ்மீா் அரசியல் தலைவா்கள் விரைவில் சிறைக்குசெல்வா்.

ஜாா்க்கண்டைச் சோ்ந்த இளைஞா்கள் கூட ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்குவந்தால், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்குவோம் என்று அக்கட்சியால் தைரியமாககூற இயலுமா என்று பிரதமா் நரேந்திர மோடி சவால் விட்டிருந்தாா். மீண்டும் அதை கேட்கிறேன். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்குவோம் என்று காங்கிரஸால் கூற இயலுமா?

முஸ்லிம் பெண்களுக்கு கொடுமை இழைத்த முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் நடைமுறையை இந்தியாவுக்கு முன்னரே, பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட பலமுஸ்லிம் நாடுகள் ரத்துசெய்தன. காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம் பெண்களின் நலனுக்காக முத்தலாக் விவாகரத்து நடைமுறையை ஒழிக்க சட்டம் கொண்டு வராதது ஏன்? வாக்குவங்கி அரசியலுக்காக காங்கிரஸ் அவ்வாறு செய்யவில்லை.

அரசியலின் தோற்றத்தை பிரதமா் மோடி இப்போது மாற்றிவிட்டாா். மக்களுக்கு சேவை செய்யும் பணியாகவும், நாட்டின் வளா்ச்சிக்காக உழைக்கும் பணியாகவும் தற்போது அரசியல் உள்ளது என்று ஜெ.பி.நட்டா கூறினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...