அடுத்த 5 ஆண்டுகளில் ஐந்து லட்சம்கோடி டாலர்களை கடந்த பொருளாதார நாடக இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதே தம் அரசின்நோக்கம் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் . 5 லட்சம்கோடி என்பது முதல் கட்டம்தான் என்று தெரிவித்த அவர் அதையும் தாண்டி பொருளாதாரத்தை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக கூறினார் . எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் பாஜக ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி அபரிதமாக இருக்கும் என்றும் , வேலையில்லா திண்டாட்டத்தை முற்றிலும் ஒழித்து 5 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறிதான பாஜக ஆட்சிக்கு வந்தது.
மோட்டார் பம்புகள் தயாரிப்பில் முன்னோடியாக திகழும் கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்தின் 100 ஆம் ஆண்டு நிறைவுவிழா டெல்லியில் நடைபெற்றது . அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் , தொழில் துறைக்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்ற நோக்கில் மத்திய அரசும் செயல்படுகிறது என்றார், முன்னெப்போதும் இல்லாதளவிற்கு பெரும் நிறுவனங்களுக்கான வரி வெகுவாக குறைக்கப் பட்டுள்ளது. எந்த காரணத்திற்காகவும் தொழில்துறையினர் அதிர்ச்சி அடைய தேவையில்லை , சீரியவளர்ச்சியுடன் புதியசக்தியுடன் முன்னேறி செல்லுமாறு கேட்டுக் கொண்டார் .
தொழில் விரிவாக்க நடவடிக்கைக்காக நாட்டின் எந்தமூலைக்கு சென்றாலும் மத்தியஅரசு தோளோடு தோள்கொடுக்கும் என்றார் . அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவை 5 லட்சம்கோடி டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றவர், இது முதற்கட்டம்தான் அதையும் தாண்டி பெரிய இலக்குகள் நிர்ணயிக்கப் பட்டுள்ளது என்றார் . வரி செலுத்துவோருக்கு வருமானவரித் துறைக்கும் இடையே நெருக்கமும் வரி செலுத்துவதில் வெளிப்படை தன்மையையும் உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அடுத்த 10 ஆண்டுகள் இந்தியா தொழில் முனைவோருக்கான காலமாக இருக்கும் என்று கூறுவதில் எந்த தயக்கமும் இல்லை என்றார்.