மீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவோம்

தேர்தலில் வெற்றிகாணாத மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்று கட்சியின் புதிய தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா இலக்கு நிர்ணயித்துள்ளார்.

பாஜகவின் தேசிய தலைவராக ஜெ.பி. நட்டா இன்று (திங்கள்கிழமை) ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, கட்சி தலைமையகத்தில் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய ஜெ.பி. நட்டா,

“பாஜக புதிய உச்சங்களைத்தொட அனைத்து நிர்வாகிகளுடன் இணைந்து இரவு பகல் பாராமல் பணியாற்றுவேன். இந்தியாவில் ஆட்சியில் உள்ள நாம் தான் இன்றைக்கு உலகின் மிகப்பெரிய கட்சி. நாட்டில் நமக்கு அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். நாம் இத்துடன் நிற்கப்போவதில்லை. இன்னும் சிலமாநிலங்கள் மீதமுள்ளன. அந்த மாநிலங்களிலும் நாம் சென்றடைவோம் என்பதை உறுதிசெய்வோம்.

நாம் நமது கொள்கைகளில் மட்டும் வேறுபட வில்லை. கொள்கைகளினால் ஏற்படும் விளைவுகளிலும் நாம் வேறுபட்டு இருக்கிறோம்.

ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து எந்த வித அரசியல் பின்புலமும் இல்லாமல் இருக்கும் என்னை போன்ற எளியநிர்வாகி ஒருவருக்கு இப்படி ஒருபொறுப்பு வழங்கப்படுகிறது என்றால் அது பாஜகவின் சிறப்பம்சமாகும். அது பாஜகவில் மட்டும்தான் சாத்தியமாகும்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.