தனதுமுகம் பொலிவாக இருப்பதற்கு கடின உழைப்பால் வந்த வேர்வையுடன் முகத்தை மசாஜ் செய்வதுதான் காரணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கலை, கலாசாரம், அறிவியல் கண்டுபிடிப்பு, சமூக சேவை, விளையாட்டு, வீரசாகசம் போன்ற பிரிவுகளில் 5 முதல் 18 வயதுடைய 49 மாணவர்களுக்கு நேற்று (ஜன.,23) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாலசக்தி புரஸ்கர் விருது வழங்கினார். அந்த மாணவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் அழைத்து பாராட்டுதெரிவித்தார். அவர்களிடம் மோடி பேசியதாவது:
சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் சிலர், உங்கள்முகம் எப்படி பொலிவாக காட்சியளிக்கிறது எனக்கேட்டனர். நான் கடினமாக உழைப்பதால் அதிகமான வியர்வை வெளிவரும்; அதைக்கொண்டு முகத்தை மசாஜ் செய்வதால், என் முகம் பொலிவுபெற்றது என எளிமையான பதிலைக்கூறினேன்.
சாதனை மாணவர்கள் தேர்ந்தெடுக்க இருவழிகள் உள்ளன. ஒன்று, விருது மற்றும் கவுரவம் பெற்றதும், திமிராக இருந்துகொண்டு சாதிப்பதை நிறுத்துவது. மற்றொன்று, விருதுகளை ஊக்கமாக நினைத்து அதைவிட சிறப்பாக செயல்படுவது. விருதுகள் என்பது முடிவல்ல; வாழ்க்கையின் தொடக்கம். இதுபோன்ற குறைந்த வயதில் நம்பமுடியாத செயல்களை செய்தது ஆச்சரியமாக உள்ளது.
இது ஊக்கமாகவும், எதிர்காலத்தில் இன்னும் நல்லசெயல்களை செய்யவும் நிச்சயம் தூண்டியிருக்கும். கடினமான சூழ்நிலைகளை எதிர்த்து போராட நீங்கள் (மாணவர்கள்) தைரியம் காட்டியுள்ளீர்கள். உங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேகம், ஆற்றல் கிடைக்கிறது. இவ்வாறு மோடி பேசினார்.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |