பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பா.ஜ.,வில் இணைந்தார்.
புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவரான அரியானா மாநிலத்தை சேர்ந்த சாய்னா, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா உள்ளிட்ட பல விளையாட்டுத் துறை விருதுகளை பெற்றுள்ளார். 24 க்கும் அதிகமான சர்வதேச பாட்மிண்டன் பட்டங்களை பெற்றவர். லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலபதக்கம் வென்றவர்.
பிரதமர் மோடியை புகழ்ந்து அவ்வப்போது டுவீட் செய்துவரும் சாய்னா, தான் பா.ஜ.,வில் இணைய உள்ள தகவலையும் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து டில்லியில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் பா.ஜ., நிர்வாகிகள் முன்னிலையில் சாய்னா கட்சியில் இணைந்துள்ளார்.
பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: இரவு , பகல் பாரா பிரதமர் உழைப்பு எனக்கு பிடித்திருந்தது. நாட்டிற்காக நல்லதுசெய்ய விரும்பினேன். பா.ஜ., தான், நாட்டிற்கு நல்ல பணிகளை செய்கிறது. கட்சியில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |