நாட்டின் ஒட்டுமொத்த மேம்பாட்டிலும் டெல்லிதேர்தல் தாக்கத்தை ஏற்படுத்தும்

நாட்டின் ஒட்டுமொத்த மேம்பாட்டிலும் டெல்லி சட்ட சபை தேர்தல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தத்தேர்தல் வரும் 10 ஆண்டுகளில் நடக்கும் முதல் தேர்தல் என்று டெல்லியில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 8-ம்தேதி தேர்தலும், 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும்நிலையில் துவாரகா பகுதியில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திரளாகப் பங்கேற்ற தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

வரும் 10 ஆண்டுகளில் இந்தியாவில் நடக்கும் முதல்தேர்தல் டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல், நாட்டின் ஒட்டுமொத்த மேம்பாட்டிலும் தேர்தல்தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் வளர்ச்சி என்பது இந்தத்தேர்தலில் வாக்காளர்களாகிய நீங்கள் எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது. வளர்ச்சித் திட்டங்களுக்குத் தடையும், வெறுப்பைப் பரப்பும் சூழல் இல்லாத அரசியல்தான் டெல்லி மக்களுக்குத்தேவை. குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது சுமத்தி எளிதாகத் திசைதிருப்பும் அரசுக்கு மாறாக, மாநிலத்தை நல்லதிசையில் எடுத்துச்செல்லும் அரசுதான் டெல்லிக்குத் தேவை. பா.ஜ.க.வின் தேர்தல் பொதுக் கூட்டத்தில் தேர்தலுக்கு 4 நாட்களுக்கு முன் ஏராளமான மக்கள் கூடியிருப்பதைப் பார்த்து பலருக்குத் தூக்கம் பறிபோய்விட்டது. கிழக்கு டெல்லியிலும், துவாரகாவிலும் மக்கள் இருக்கும் கூட்டத்தால் மக்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தெளிவாகிறது. எதிரிகள் எங்களை தாக்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் அரசு டெல்லிக்கு தேவையில்லை.

டெல்லி மாநிலத்தின் மக்கள், விவசாயிகள், சாலையில் செல்வோர் அனைவரை பற்றியும் ஆம்ஆத்மி அரசு கவலைப்பட வில்லை. டெல்லியில் வீடில்லாமல் வாழும் மக்களைப்பற்றி ஆம் ஆத்மி அரசு நினைத்துப் பார்த்துள்ளதா?பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் வீடில்லா ஏழைகள் வீடு பெற ஆம் ஆத்மி கட்சி தடையாகவே இருந்து, அதற்கு அனுமதிக்கவில்லை. விவசாயிகள் என்ன தவறு செய்தார்கள்? பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் பலன்பெறாமல் அவர்களை ஏன் ஆம்ஆத்மி அரசு தடுத்தது? டெல்லியில் 4-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை நிறைவேற்ற மத்திய அரசு காத்திருக்கிறது.

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக டெல்லி அரசு அனுமதி வழங்க மறுக்கிறது.பிரதமரின் ஆயுஷ்மான் பாரத்திட்டத்தை டெல்லியில் செயல்படுத்த ஆம் ஆத்மி அரசு தடுத்துவிட்டு, மொஹல்லா கிளிக்னிஸ் திட்டத்தைச் செயல்படுத்தியது. நான் கேட்கிறேன், டெல்லி மக்கள் வெளிமாநிலம் சென்றால் இந்தத் திட்டத்தால் பயன்பெற முடியுமா? இலங்கை மற்றும் அமெரிக்க மக்கள் தொகையைக் காட்டிலும், இந்தியாவில் வாழும் மக்களுக்கு வங்கிக் கணக்குகளை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்பிவருகின்றனர். ஆனால், டெல்லி மக்கள் இதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்திய ராணுவத்தினரை அவமதித்தவர்களைத் தண்டிக்க, மக்கள் இந்தத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...