தில்லியில் சட்டப் பேரவைத் தேர்தல் வரவுள்ளதையொட்டி, தேர்தல்தேதி வரை குடிசைப் பகுதிகளில் குடியேறுமாறு கட்சியின் தலைவர் ஜெபி. நட்டா 250 பாஜக உறுப்பினர்களை அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
70 பேரவைத் தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப் பேரவைக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்தத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்நிலையில், பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் கட்சிக்கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அடித்தட்டு மக்களின் வாக்குகளைக் கவரும் நோக்கத்தில் புதிய வியூகத்தை வகுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின்படி, 250 பாஜக உறுப்பினர்களை இன்று இரவு முதல் தேர்தல் தேதிவரை தில்லி முழுவதும் உள்ள குடிசைப் பகுதிகளில் குடியேறுமாறு ஜெ.பி. நட்டா அறிவுறுத்தியுள்ளார். எனவே, பாஜக எம்பி-க்கள் இன்று இரவு டென்ட் அமைத்து, குடிசைவாழ் மக்களுடன் இணைந்து அவர்களுடன் இரவு உணவைப் பகிர்ந்து உண்ணப்போவதாகத் தெரிகிறது.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |