70 உறுப்பினர்கள் அடங்கிய டில்லி சட்ட சபைக்கு, கடந்த 8ம்தேதி தேர்தல்நடந்தது. ஆளும் ஆம் ஆத்மி, 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. பா.ஜ., 67 தொகுதிகளிலும், அதன்கூட்டணி கட்சிகளான, ஐக்கிய ஜனதாதளம், இரண்டு தொகுதிகளிலும், லோக் ஜன சக்தி ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. காங்கிரஸ், 66 தொகுதிகளிலும், அதன்கூட்டணி கட்சியான, ராஷ்ட்ரீய ஜனதா தளம், நான்கு தொகுதிகளிலும் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி – பா.ஜ., இடையேதான், போட்டி நிலவியது. பாஜக கடுமையான போட்டி காட்டியதால் அதன் ஓட்டு சதவீதமும் கடந்த தேர்தலைவிட அதிகரித்துள்ளது. 8 இடங்களில் வெற்றிபெறும் பா.ஜ.,வுக்கு, கடந்த தேர்தலைவிட 5 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.காங்கிரஸ் நிலைமைதான் அந்தோ பரிதாபம். போட்டியிட்ட 66 இடங்களில் ஒருஇடத்தில் கூட அக்கட்சி முன்னிலை வகிக்கவில்லை. அதை விட, 63 இடங்களில் அக்கட்சிக்கு டெபாசிட் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியதால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளித்து, ஷீலா தீட்சித்தை முதல்வராக ஏற்றுக் கொண்ட டில்லி மக்கள், அதன்பின் தொடர்ந்து காங்., கட்சியை புறக்கணிப்பது இத்தேர்தல் முடிவிலும் வெளிப்படையாக தெரிகிறது. காங்., கட்சி சார்பில், அர்விந்தர்சிங் (காந்திநகர் தொகுதி), தேவேந்திர யாதவ் (பத்லி தொகுதி) மற்றும் அபிஷேக் தத் (கஸ்தர்பா நகர்) ஆகியோர் மட்டும் டெபாசிட் பெற்றனர்.
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
1eligibility