காஷ்மீர் மாநிலம் புல்வமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி, மத்தியரிசர்வ் போலீஸ் படையினர் சென்றவாகனம் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இந்த கொடூரதாக்குதல் நடைபெற்றதன் ஓராண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
வீரர்களின் உயிர்த்தியாகத்தை நினைவு கூர்ந்து பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ கடந்த ஆண்டு நடைபெற்ற கொடூரமான புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். நாட்டைபாதுகாக்கும் சேவையில் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த வீரர்கள் போற்றத்தக்கவர்கள். வீரர்களின் தியாகத்தை இந்தியா ஒரு போதும் மறவாது” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், ” புல்வாமா தாக்குதலின் தியாகிகளுக்கு மரியாதை செலுத்துகிறேன். நமது தாய் நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமை பாட்டிற்காக மிகுந்த தியாகம்செய்த எங்கள் துணிச்சலான இதயங்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடையதாக இருக்கும்” என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
3introspection