காங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை.

கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு 120 எம்.எல்,.ஏக்களின் ஆதரவு இருந்தநிலையில் முதல்வர் பதவி கிடைக்காததால் ஜோதிராதித்ய சிந்தியாவும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் அதிருப்தி அடைந்து இருந்தனர்.

இந்நிலையில், மத்தியபிரதேச அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் நேற்று பெங்களூரு சென்றுள்ளனர். .

பெங்களூருவில் ரகசிய இடத்தில் தங்கியுள்ள 19 எம்எல்ஏக்களும் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒரு வரான ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் ஆவர். இதையடுத்து மத்தியபிரதேசத்தில் சில அமைச்சர்களை பதவி விலகச்செய்து ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களுக்கு பதவிவழங்க காங்கிரஸ் தலைமை முன்வந்துள்ளது. இதற்கு ஏதுவாக அம்மாநிலத்தில் 19 அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். இதனால் மத்தியபிரதேச அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:

‘‘இது காங்கிரஸ்கட்சியின் உள் விவகாரம். இதுபற்றி நான் கருத்துக்கூற விரும்பவில்லை. காங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை.

அதேசமயம் இந்த அரசு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சிபூசல் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனை தீர்க்கவேண்டியது அந்த கட்சிதான். முதல்வர் கமல்நாத்தின் தலைமைக்கு எதிராக அக்கட்சியில் ஒருபிரிவினர் அணிதிரள்கின்றனர்.’’ என சவுகான் கூறினார்.

முன்னதாக ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மாதவராவ் பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு சவுகான் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...