மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி பாஜக தொடர்ந்த வழக்கில் முதலமைச்சர் கமல்நாத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 22 பேர் பதவி விலகியதைத் தொடர்ந்து முதலமைச்சர் கமல்நாத்தை பெரும்பான்மையை நிரூபிக்க நேற்றே ஆளுநர் உத்தரவிட்டார்.
இதன்படி சட்டப்பேரவை நேற்றுகாலை கூடிய நிலையில், கொரோனா அச்சம் காரணமாக பேரவைவரும் 26ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக தரப்பில் மனு அளிக்கபட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஹேமந்த்குப்தா அமர்வு, மனு தொடர்பாக சபாநாயகர், முதலமைச்சர் கமல்நாத் மற்றும் அரசின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |