அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்புமருந்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகளின் ஒப்புதலுக்குப்பிறகே பயன்பாட்டுக்கு விடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இது குறித்து பேசியவர், கொரோனா வைரசுக்கான தடுப்புமருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருவதாகவும், இவற்றை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.
கொரோனா தடுப்புமருந்தினை அமெரிக்கா கண்டுபிடித்திருப்பது குறித்த தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட சுகாதாரத் துறை அமைச்சர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகளின் ஒப்புதலுக்கு பிறகே, அந்தமருந்து பயன்படுத்தப் படுவதற்கு அனுமதி வழங்கப்படும் என கூறினார். நாட்டுமக்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |