மத்திய அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை களுக்காக மாநில உள்ளாட்சி அமைப்புக்களுக்கு நிதிஒதுக்கி உள்ளது.
நாடெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாகப் பலமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாகப் பல மாநிலங்களில் பணி இடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல லட்சக் கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இவர்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு உதவிஅளிக்கும் எனப் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கான பணிகளில் மத்திய நிதி அமைச்சகம் ஆய்வு செய்வதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், ”கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை சுகாதார பணிகளுக்காக மாநில உள்ளாட்சி அமைப்புக்களுக்கு முதல் கட்டமாக ரூ.2570 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ. 987.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு ரூ.431 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
2paddling