இந்தியா 4500 ரூபாய் கொரோனா டெஸ்ட் நடத்த வசூலிக்கிறதா?

நாட்டுப்பற்று இல்லாத ஒருசில ஜந்துகள், எப்போதும் அரசாங்கத்தை குறை கூறி நாட்டை பிரிவினை வாதம் செய்வதே வேலை. இதோ கிளம்பி விட்டார்கள் இந்த பித்தலாட்டக்காரர்கள்.

இந்தியா 4500 ரூபாய் கொரோனா டெஸ்ட் நடத்த வசூலிக்கிறது என்று..

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்துவருகிறது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கொரோனா பாதிப்பு இருக்குமோ என்று பொதுமக்கள் அச்சபடுகின்றனர். உடனே அரசு மருத்துவ மனைகளுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் நாடுமுழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையொட்டி அனைத்து தனியார் ஆய்வகங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் மாநிலங்கள் வாரியாக 52 மையங்களில் கொரோனா டெஸ்ட் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.(டெஸ்ட்மட்டுமே இந்த மையங்களில் இரத்த மாதிரி-blood samples நாடுமுழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பெறுப்படும்)

இவை இல்லாமல் புதிதாக 12 தனியார் லேப்களுக்கு கொரோனா டெஸ்ட் நடத்த மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. இந்த பன்னிரண்டு லேப்களும் முதல்கட்ட பரிசோதனைக்கு ரூ.1,500ம், உறுதிப்படுத்தும் ஆய்வுக்கு ரூ.3,000ம் அதிகபட்சமாக ரூபா 4500 வசூலிக்கலாம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.முடிந்த வரை இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த உண்மையை அப்படியே திரித்து இந்தியாவில் கொரோனா டெஸ்ட் க்கு 4500 ரூபாய் என்று புரளி கிளப்பி வருகிறது ஒரு கூட்டம்.

இவர்களின் இச்செயலால் டெஸ்ட் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் கூட 4500 செலவாகுமே என்று செய்யாமல் இருக்கப்போகிறான்..

மக்களே வதந்திகளை நம்பாதீர்கள்,
நோய் அறிகுறி தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

எல்லோரும் நலமுடன் வளமுடன்
இவ்வுலகில் வாழ
எம் ஈசன் காப்பார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...