வீட்டில் இருந்தபடியே தடுப்பு பணிகளை உன்னிப்பாக கவனிக்கும் மோடி

“நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கில் 5 நாட்கள் கடந்த நிலையில் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் 150 முதல் 200 பேருடன் தொலைபேசியில் பேசி ஊரடங்கைய…

நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கில் 5 நாட்கள் கடந்தநிலையில் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் 150 முதல் 200 பேருடன் தொலை பேசியில் பேசி ஊரடங்கையும் கொரோனா நிலவரத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார் . இதுதொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், எண் 7, லோக்கல்யாண் மார்க் என்ற விலாசத்தில் 12 ஏக்கர் வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் குடியிருப்பு முகாம் அலுவலக வளாகத்தைவிட்டு பிரதமர் மோடி இதுவரை வெளியே செல்லவில்லை. பிரதமருக்குத் தேவையான அனைத்து அலுவலகங்களும் இங்கேயேஉள்ளது.. பிரதமர் எல்.கே.எம் அலுவலகத்தை தனதுபணிக்காக அதிகமாகப் பயன்படுத்துகிறார். ஊரடங்கு அறிவித்தபின், பிரதமர் மோடி வீட்டிலிருந்தே பணியாற்றுகிறார் என்றார்கள்.

 

பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா ஒவ்வொருநாளும் பிரதமர் மோடியை சந்திக்க அவரது இல்லத்திற்கு வருகிறார். அமைச்சரவை செயலாளர் ராஜிவ்கவுபாவும் வருகிறார். மேலும், மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையிலான அமைச்சர்கள் குழுவும் சந்திக்கிறது. சர்வதேச தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்களிடமும் அவ்வப்போது பிரதமர் பேசிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கபட்டுள்ளது. பிரதமரை பாதுகாக்கும் சிறப்புபாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்களும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று நோயை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று நாடுமுழுவதும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதாரபணியாளர்கள் போன்றோர் தங்கள் உயிரைப் பணயம்வைத்து சேவை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு புத்துயிர் அளிப்பதற்காக, பிரதமர் மோடி நேற்று தனது மான் கி பாத் உரையில் வெகுவாகபாராட்டி பேசியதுடன் அவர்களை போர்வீரர்கள் என்று குறிப்பிட்டார்.

இதுவரை கொரோனா வைரஸ் விவகாரத்தில் மூன்றுமுறை நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். முதல் முறையாக மக்கள் ஊரடங்கை சோதனை முறையில் நடத்தவேண்டும் என்று பேசினார். இரண்டாவது முறை 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து அதற்கான காரணத்தை விளக்கினார். மூன்றாவது முறையாக நேற்று வானொலி நிகழ்ச்சியில் பேசியபிரதமர் மோடி, ஊரடங்கை அறிவித்ததற்காக மன்னிப்புகேட்டார். அத்துடன் ஊரடங்கை தவிர கொரோனாவை தடுக்க வேறுவழியில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டார். பிரதமர் வீட்டில் இருந்தபடியே கொரோனா தடுப்பு பணிகளை தற்போது உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...