இன்று உலகம் பல விசித்திரங்களை கண்டு வருகிறது. உலகையே அழிக்கவல்ல பல அணு ஆயுதங்களை செய்து குவித்து வந்தவர்கள், எத்தகைய பெரிய அணு ஆயுதங்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் தங்களுக்கு உண்டு என்று கொக்கரித்தவர்கள், இன்று மிக மிக சிறிய கண்ணுக்கே புலனாகா கொரோன வைரஸை கண்டு அஞ்சி நடுங்குகின்றனர் . சுகாதாரத்திலும், உயர் மருத்துவ தொழில் நுட்ப்பதிலும் உச்சம் கண்டவர்களாக தங்களை காட்டிக் கொண்டு இந்நோயை அலட்சிய படுத்தியவர்கள், இன்று கட்டுப்படுத்தும் முகம் தெரியாமல் லட்சங்களில் நோயாளிகளை பெற்று, நிராயுதபாணியாக கொன்று வருகின்றனர். இன்று சின்னஞ்சிறிய கொரோன உலகையே ஆட்டிப் படைக்கிறது. இது விசித்திரம் அல்ல?.
இதற்கு இந்தியாவும் விதி விலக்கல்ல, ஆனால் அது விழித்துக் கொண்டதால், தன்னை தற்காத்து கொண்டுள்ளது. சுமார் 130 கோடி மக்கள் தொகை, திருவிழா, மத வழிபாடுகள்,சுப, துக்கங்களில் இயல்பாகவே பல்லாயிரம் பேர் கூடும் பழக்கங்கள். பல லட்சம் கோடி புழங்கும் பெரும் நிறுவனங்கள் 50 கோடிகும் அதிகமான தொழிலாளர்கள், 6 கோடிக்கும் அதிகமான சிறு குறு நிறுவனங்கள், இவைகளை ஒரே நேரத்தில் கட்டுப் படுத்துவது, முடக்குவது என்பது இயலாத ஒன்று.
எனவே இந்தியா 30 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட தேசமாக மாறும் என்ற உலக நாடுகளின் ஆருடம் பொய்க்கப் பட்டுள்ளது.எங்களுக்கு பொருளாதாரம் முக்கியமல்ல, பாரத மக்களின் உயிரே முக்கியம் என்ற பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தீர்க்கமான முடிவே இதை பொய்க்க வைத்துள்ளது.
இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள் நோய் தொற்றால் பல்லாயிரங்களை கடந்த நிலையிலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாமல் திணறிய நிலையில், தொற்றுக்கான மூலங்களை இன்று வரை கண்டறிய முடியாத நிலையில். இந்தியா நோய் தொற்றால் சில நூறுகளை தாண்டுவதற்கு முன்பே சமூக இடைவெளியில் வெற்றி கண்டது. நோய் தொற்றுக்கான மூலங்களை இன்று வரை தேடி தேடி கண்டுபிடித்து பல லட்சம் பேரை தனிமை படுத்தி வருகிறது.
ஜனவரி 17.,லிருந்து தொடர் கண்காணிப்பும், வெளி நாடுகளில் இருந்து வந்தவர்களை தனிமை படுத்தியதும், அடையாள படுத்தியதும், ஒன்றுக்கும் அதிகமானோர் கூடும் நிகழ்வுகளை ரத்து செய்ததும், 22ம் தேதிய ஒருநாள் ஊரடங்கும், 24ம் தேதியிலிருந்து தொடர் 21 நாள்கள் ஊரடங்கும் இதை சத்திய படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 3374 பேருக்கு பாதிப்பு என்பது மிக குறைவான எண்ணிக்கையே.
அதுவும் அரசின் தடையையும் மீறி டெல்லி நிஜாமுதினில் தப்லிகி ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்ட 8000க்கும் அதிகமானோரால் 17 மாநிலங்களில் உருவான நோய் தொற்றே கடந்த சில நாட்களாக எண்ணிக்கையில் பிரதானம்.இதனால் கிட்டத்தட்ட 1050 பேர் வரை கூடுதல் பாதிப்பு. இல்லாவிட்டால் இந்தியா 2300 என்ற அளவில்தான் இருந்திருக்கும். இருப்பினும் இந்தியா அஜாக்கரதையாக இருந்திருந்தால், ஒரு சில நாட்கள் ஊரடங்கை தாமதித்திருந்தால். திடீர் என மக்களுக்கு உருவாகும் அசவுகரியங்களை எண்ணி தயங்கியிருந்தால் இன்று பாதிக்கப்பட்டோரில் நாம் பல லட்சங்களை கடந்திருப்போம். அதற்கு இதை போன்ற சில கூட்டங்களே போதும்.
இன்று இந்தியா சிறந்த நிர்வாகத்தினால் பாதுகாக்கப் பட்டுள்ளது. ஆனால் இதை எண்ணி பெருமை கொள்ளாமல், அமெரிக்கா ,இத்தாலிகளில் எழும் லட்ச கணக்கான மரண ஓலங்கள் இங்கே இல்லை என்று அமைதி கொள்ளாமல்.சிறு சிறு அசௌரிய ஓலங்களை எல்லாம் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள் பெரிது படுத்துவது ஏனோ?.
இது ஒன்று பட்டு போராடவேண்டிய நேரமிது. ஒன்றாக கைதட்டி கொரானாவுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கிய நாம் . இன்று இரவு ஒளியேற்றி கொரானா இருளை ஒழிப்போம்.
நன்றி தமிழ்தாமரை VM வெங்கடேஷ்
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |