மத துவேச வழக்குகள், அவதூறு வழக்குகள் எல்லாம் பாஜக.,வினருக்கே உருவாக்க பட்டதா , இந்துக்களுக்கே மட்டுமே படைக்க பட்டதா என்ற ஐயம், சமீபத்திய ஒரு சில காவல் துறை அதிகாரிகளின் செயல்களிலிருந்தே எழுகிறது.அது எழுத்தாளர் மரிதாஸின் மீதான வழக்காக இருக்கட்டும், நாகை மாவட்ட பாஜக தகவல் தொழில் நுட்ப தலைவர் வீரமணியின் கைதாக இருக்கட்டும். இதைத்தான் உறுதி செயகிறது.
அவர் ஏதோ சிறுபான்மையினரை புண்படுத்தி விட்டாராம், இவர் பாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்டார்கள். கடந்த பல வருடமாக இந்து கடவுள்களையும், அதன் வழிபட்டு முறைகளையும் விமர்சிக்கும் திக வீரமணிகளையோ , திமுக வீரமணிகளையோ, குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வடிவில் பாராத பிரதமர் நரேந்திர மோடி ,அமித்ஷா போன்றவர்களை கடந்த 4 மாதமாக பொதுவெளியில் மிகவும் கேவலமாக விமர்சித்த முகமதிய விரமணிகளையையோ கைது செய்தர்களா?. வழக்குதான் தொடுத்தார்களா?.
அல்லது கூட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதில் கெடுபிடித்தான் காட்டினார்களா?. செய்தர்கள் இவைகளுக்கு எல்லாம் அனுமதி கொடுத்துவிட்டு (CAA) கைகட்டி வேடிக்கை பார்த்தார்கள். தாங்கள் எடுத்த வீடியோ ஆதாரங்களை திரும்ப திரும்ப போட்டு பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவைகளை எல்லாம் விடுத்து எங்கோ சமூக ஊடகத்தில் சிலர் பார்க்க இருந்த செய்திகளை தேடி கண்டு பிடித்து வழக்கு போட்டு, அளவுக்கு அதிகமாக ஆர்வம் கட்டியுள்ள வேதாரண்யம் காவல் துறை அதிகாரியின் செயல் வேடிக்கையின் உச்சம்.
தமிழகத்தில் இன்று இந்து மதத்துக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக, உண்மைக்கு மாறாக பொய்யுரைத்தும், பல்லாயிரம் வீடியோக்கள், சமூக ஊடக குறுஞ் செய்திகள் நிக்கமற நிறைந்துள்ளன. தினம் தினம் பல நூறு செய்திகள் உருவாகி கொண்டே இருக்கின்றன. இவைகள் கலையப்பட்டிருக்க வேண்டும். கடும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இவைகள் எல்லாம் சரியாக நடந்திருக்குமேயானால் பாஜக வீரமணிகளுக்கு இடமே இல்லாமல் போயிருக்கும், போய்விடும்.
இவ்வளவு துப்புரவு புலியாக இருக்கும் வேதாரண்யம் காவல் துறை அதிகாரியை, டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட , தமிழகத்தில் அடையாளம் காணப்படாமல் இருக்கும் சிலரை கண்டுபிடுக்கும் பணியில் அமர்த்தி தமிழக அரசு அழகு பார்க்கலாம்.
நன்றி தமிழ்தாமரை VM வெங்கடேஷ்
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |