கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கும் அமெரிக்காவில் வியோமிங் மாகாணத்தையும் பேரழிவுப்பகுதியாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பதன் மூலம், அந்நாட்டின் 50 மாகாணங்களும் பேரழிவுப்பகுதியாக அறிவிக்கபட்டுள்ளது.
உலகளவில் 18 லட்சம் பேரை கரோனா தொற்று பாதித்துள்ளது. இது வரை 11 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் இது வரை 5 லட்சத்து 60 ஆயிரம்பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ளது. பலி எண்ணிக்கை 22 ஆயிரத்தை தொட்டு விட்டது.
கரோனா தொற்றால் உலகிலேயே மிகவும் பாதிக்கபட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. பாதிப்பிலும், உயிர்பலியிலும் அமெரிக்காவே முதல்இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் கரோனாதொற்று பாதித்து உயிரிழப் பவர்களின் எண்ணிக்கை ஐந்து நாள்களுக்கு ஒருமுறை இரட்டிப்பு ஆகிறது. அதாவது ஐந்து நாட்களுக்கு முன்பு 10 ஆயிரமாக இருந்தபலி எண்ணிக்கை, தற்போது 20 ஆயிரத்தை எட்டிவிட்டது.
இந்நிலையில், கரோனா தொற்று அதிகமாக பாதிக்கப்பட்ட நியூயார்க் மாகாணத்தில் முதல் முறையாக பேரழிவு மாகாணமாக அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து ஒவ்வொரு மாகாணங்களாக பேரழிவு மாகாணங்கள் பட்டியலில்சேர்ந்தன. கடைசியாக வியோங் மாகாணத்தையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேரழிவு மாகாணமாக அறிவித்ததை அடுத்து, அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக அனைத்து 50 மாகாணங்களும் பேரழிவு மாகாணங்களாக அறிவிக்கபட்டுள்ளன.
அமெரிக்காவில் இயற்கை பேரழிவுகளின்போதும், பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் போதும், ஒருசில மாகாணங்கள் மட்டுமே பேரழிவுப்பகுதியாக அறிவிக்கப்பட்டது உண்டு. ஆனால், இது தான் முதல் முறை, 50 மாணாங்களும் பேரழிவு மாகாணங்களாக அறிவிக்க பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக அனைத்து மாகாணங்களும் அதிபரின் பேரழிவுப் பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளது. கண்ணுக்கு தெரியாத எதிரியுடனான போரில் நாம் வென்றுவருகிறோம். விரைவில் முழுவதும் வெற்றிபெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |