3 வயது சிறப்பு குழந்தைக்காக பிரதமர் மோடிக்கு ட்வீட் செய்த தாய்: ராஜஸ்தானில் இருந்து வந்த 20 லிட்டர் ஒட்டகப் பால்

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மூன்றரைவயது குழந்தைக்கு ஒட்டகப்பால் தேவை என்று மும்பையைச் சேர்ந்த பெண், பிரதமர் மோடியை டேக்செய்து ட்வீட் செய்ததையடுத்து, ராஜஸ்தானிலிருந்து 30 லி்ட்டர் ஒட்டகப் பாலை ரயில்வே துறை மும்பை கொண்டுவந்து அந்த பெண்ணிடம் சேர்த்தது பலரது பாராட்டையும் குவித்து வருகிறது.

மும்பையைச் சேர்ந்த ரேணுகுமாரி எனும் பெண் ஒருவர் பிரதமர் மோடியின் ட்விட்டரில் டேக் செய்து ட்வீட்செய்தார். அதில் “ சார், எனக்கு 3.5 வயதில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை இருக்கிறான். அவனுக்கு பசுவின்பால், ஆட்டுப்பால், எருமைப்பால் என எது கொடுத்தாலும் ஒவ்வாமை ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுவான்.

அவனுக்கு தொடர்ந்து ஒட்டகப் பால் மட்டுமே வழங்கி வருகிறேன். தற்போது லாக்டவுன் நீடிப்பதால், என்னிடம் ஒட்டகப் பால் போதுமான அளவு இருப்பு இல்லை, என் குழந்தைக்கு ராஜஸ்தான் சாத்ரி நகரிலிருந்து ஒட்டகப்பால், அல்லது பால் பவுடர் கிடைக்க உதவிசெய்ய வேண்டும்” எனத் தெரிவி்த்திருந்தார்.

ரேணு குமாரியின் ட்விட்டைப் பார்த்த பலரும் அந்தகுழந்தைக்கு பால் கிடைக்க பல்வேறு ஆலோசனைகள் தெரிவி்த்தார்கள். நாட்டிலேயே முதல்தரமான ஒட்டகப்பால் பொருட்களை தயாரிக்கும் அத்விக் நிறுவனம்கூட குழந்தைக்கு பாலை இலவசமாக வழங்க முன்வந்தது, ஆனால் லாக்டவுனில் அனுப்புவது சாத்தியமா என கேட்டது

இந்த ட்வீட்டைப் பார்த்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி அருண்போத்ரா அந்த பெண்ணின் குழந்தைக்கு ஒட்டகப்பால் கிடைக்க ஏற்பாடுசெய்தார்.

இதுகுறித்து வடமேற்கு ரயில்வே போக்கு வரத்து மேலாளர் தருண்ஜெயின் அளித்த பேட்டியில், “ ஐபிஎஸ் அதிகாரி போத்ரா மூலம் இந்தவிவகாரம் எனக்கு தெரியப் படுத்தப்பட்டது. உடனடியாக நான் அஜ்மீரில் உள்ள மண்டல ரயில்வேமேலாளர் மகேஷ் சந்த் ஜீவாலியாவைத் தொடர்ப்புகொண்டு பேசினேன்.

இதையடுத்து, பஞ்சாப் லூதியானாவிலிருந்து மும்பை பாந்த் ராவுக்கு செல்லும் சரக்குரயில் 00902 என்ற ரயிலை ராஜஸ்தானின் பால்னா ரயில் நிலையத்தில் நிறுத்த திட்டமிட்டோம். அந்த ரயில்நிலையத்துக்கு 20 லி்ட்டர் ஒட்டகப் பாலை கொண்டுவரச் செய்து பேக்கிங் செய்து மும்பைக்கு அனுப்பி வைத்தோம். இதற்காக பால்னா ரயில்நிலையத்தில் ரயிலை சிறப்பு அனுமதி பெற்று நிறுத்தினோம்.

லாபம்சம்பாதிக்க, வர்த்தகம் செய்ய இது உகந்த நேரம் அல்ல, மனித நேயம்தான் முக்கியம். 18 மாவட்டங்களைக் கடந்து ரயில்வே ஒருகுழந்தைக்கு உதவியுள்ளது” எனத் தெரிவித்தார்

இந்த சம்பவம் குறித்து பதில் அளித்து ஐபிஎஸ் அதிகாரி போத்ரா ட்வீட் செய்திருந்தார். அதில், “20 லிட்டர் ஒட்டகப் பால் நேற்று இரவு அந்த பெண்ணின் குழந்தைக்கு வழங்கப்பட்டது. அந்த குடும்பத்தினர் நன்றியுடன் பாலைப் பெற்றுக் கொண்டனர். வடமேற்கு ரயில்வேக்கு நன்றி” எனத் தெரிவி்த்தார். ரயில்வதுறையின் உதவியை நெட்டிஸன்கள் பாராட்டி வருகின்றனர்.

பிரதமர் மோடிக்கு டிவீட் செய்தல் அவர்தன் இறங்கி வந்து செய்ய வேண்டும் என்பதில்லை, தொடர்புடைய துறைகளே தானாக தனது கடமையை ஆற்ற தொடங்கி விடுகின்றன .

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...