21 நாள் ஊரடங்கு உத்தரவு இன்றோடு முடிவடைய உள்ளநிலையில், பிரதமர் நரேந்திரமோடி பொது மக்களிடையே உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியது பின்வருமாறு:-
“கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவானபோரை நடத்தி வருகிறது. ஊரடங்கு உத்தரவால் சிலருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை சரியான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது.
ஊரடங்கால் சிலர் தங்களது குடும்பத்தை பிரிந்து இருக்கிறார்கள் என்பதையும் உணரமுடிகிறது. பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு, மக்கள் அனைவரும் நாட்டை காத்து வருகின்றனர். கொரோனாவுக்கு எதிரானபோரில், இந்திய நாட்டு மக்கள் அனைவரும் படைவீரர்கள் போல் செயல்பட்டு வருகின்றனர்.
ஊரடங்கை சிறப்பாக பின்பற்றி, கொரோனா வைரஸ் பரவுவதை குறிப்பிடத் தகுந்த அளவிற்கு பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். கொரோனாவால் ஏற்பட இருந்த பாதிப்பை இந்தியாவெற்றிகரமாக தகர்த்துள்ளது.
கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வந்தவர்களை, விமான நிலையத் திலேயே பரிசோதனை உட்படுத்தினோம். நாடுமுழுவதும் மே 3-ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |