மும்பையில் அவர் செய்சியாளர்களுக்கு அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்…
* 2021-22 ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிப்பு.
* நாட்டில் பணப் புழக்கம் சீரான நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
* ரிவர்ஸ் ரெப்போவட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாக குறைப்பு.
* ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. 4.4 % ஆக தொடரும்.
* நபார்டு, சிட்பி, என்.ஹெச்.பி வங்கிகளுக்கு ரூ.50 ஆயிரம்கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு.
* விவசாயம், சிறுகுறு தொழில் கடன்வழங்க சிறப்பு நிதி ரூ.50 ஆயிரம் கோடி பயன்படுத்தப்படும்.
* வங்கிகள் தாராளமாக கடன்கொடுக்க அறிவுறுத்தபட்டுள்ளது.
* ஜப்பான், ஜெர்மனியின் ஒட்டுமொத்த பொருளாதார அளவிற்கு உலகம் முழுவதும் சரிவு இருக்கும். ஜி-20 நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதம் அதிகரிக்கும் என உலக பொருளாதாரம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியகம் கணித்துள்ளது.
* இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது; இது ஜி-20 நாடுகளில் அதிகம்.
* சிறு, குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாக கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* மாநிலங்களுக்கு 60 சதவீதம் கூடுதலாக நிதி உதவி . அதாவது அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம்.
* இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37%ஆக அதிகரித்துள்ளது.
* பங்குச் சந்தை தங்குதடையின்றி செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
* நாட்டில் பணப்புழக்கம் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.