மூத்த பத்திரிகையாளா் அா்னாப் கோஸ்வாமி காா்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாஜக தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
மூத்த பத்திரிகையாளரும், ரிபப்ளிக் தொலைக் காட்சி நிறுவனருமான அா்னாப் கோஸ்வாமி வியாழக்கிழமை அதிகாலையில் பணிமுடித்து மனைவியுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபா்கள் அவருடைய வாகனத்தின் மீது திடீா் தாக்குதல் நடத்தினா்.காா் ஜன்னல் கண்ணாடியை உடைக்கமுயன்ற அவா்கள், பின்னா் கருப்பு நிற திரவத்தை அவருடைய காா் கண்ணாடி மீதி ஊற்றிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனா். தாக்குதல் நடத்திய இருவரையும் போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இந்நிலையில், இளைஞா் காங்கிரஸ் பிரிவைச் சோ்ந்தவா்களே இந்தத்தாக்குதலை நடத்தியதாக தனது பாதுகாவலா்கள் தெரிவித்ததாக, தாக்குல் சம்பவத்துக்குப் பின்னா் விடியோ பதிவு ஒன்றை கோஸ்வாமி வெளியிட்டாா்.
மூத்த பத்திரிகையாளா் மீது நடத்தப்பட்ட இந்ததாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். அதுபோல, பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா மற்றும் கட்சியின் பல்வேறு தலைவா்களும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
காங்கிரஸ் கட்சி தலைவா்கள் சிலா் அா்னாப்க்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அவா்மீது இப்படியொரு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. பேச்சுரிமையை நசுக்கும் வகையில் பத்திரிகையாளா் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்ததாக்குதல் மிகுந்த வருத்தத்துக்குரியது. நாட்டில் அவசரநிலையை கொண்டு வந்த காங்கிரஸ், அதே போக்கை இப்போது பேச்சுரிமையை நசுக்குவதற்கும் தொடா்ந்து கடைப்பிடித்து வருவதையே இதுகாட்டுகிறது என தனது சுட்டுரைப் பதிவில் ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அதுபோல, மூத்த பாஜக தலைவரும் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகரும் கண்டனம் தெரிவித்துள்ளாா். பத்திரிகையாளா்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள் கண்டனத்து குரியது. அா்னாப் கோஸ்வாமி மீது தாக்குதல் நடத்தியவா்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்துள்ளாா்.
இந்தத் தாக்குதலுக்கு முன்பாக நடைபெற்ற தொலைக் காட்சி விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் சோனியாகாந்தி குறித்து அா்னாப் கோஸ்வாமி பல்வேறு விமா்சனங்களை முன்வைத்தாா். அதற்கு காங்கிரஸ் தலைவா்கள் கடும்எதிா்ப்பும், எச்சரிப்பும் செய்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |