சீனாவில் இருந்து நிறுவனங்களை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கு ஊக்கம்

நாட்டில் முதலீடுகளை அதிகரிப்பதுகுறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது நாட்டில் முதலீடுகளை அதிகரிப்பதற்கும், சீனாவில்இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கும் கூட்டத்தில் ஊக்கம் அளித்தார்.

 

சீனா உள்ளிட்ட நாடுகளில்இருந்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதுடன் உள்நாட்டிலும் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாக பிரதமர் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தகூட்டத்தில். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்தபின்னர் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி தளத்தை சீனாவிற்கு இருந்து வேறுநாடுகளுக்கு மாற்றும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.அப்படி வெளியேற விரும்பும் நிறுவனங்கள், வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்குள் கொண்டுவருவதற்கான திட்டங்களை உருவாக்குமாறு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு ஊக்கம் அளித்தார். அத்துடன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பது குறித்தும் நேற்று ஆலோசனை தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் முதலீடுகள் உடனே வந்துசேரவும், உடனடியாக பயன் கிடைக்கும் வகையில் செயல்படவேண்டும் என பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு வேகமாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும், தேவையான ஒப்புதல்களை உடனுக்குடன் அளிக்கவேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

தொழில்துறை ஊக்கம்பெறவும், தொழில்துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தினார்.

சீனாவில் தொழிலாளர்களுக்கான ஊதியம் கடுமையாக அதிகரிப்பு பிரச்னையால் ஏற்கனவே பல பன்னாட்டு நிறுவனங்களை உற்பத்தி தளங்களை வேறு நாட்டிற்கு மாற்றலாமா என்று யோசித்து வந்தன. இந்தியா அந்த நிறுவனங்களை தங்கள் நாட்டிற்குள் கவர்ந்து இழுக்க வேகம்காட்டி வந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு பிறகு சீனா விநியோக சந்தையில் உலகளாவிய ஆதிக்கம் செலுத்துவது சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டு வருகிறது.

இதனால் ஏராளமான நிறுவனங்கள் சீனாவைவிட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளது. இதை சாதகமாக பயன் படுத்த இந்தியா விரும்புகிறது. ஏற்கனவே தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு ஒற்றை சாளர முறைதிட்டத்தில் உடனே அனுமதி வழங்கும் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலத்தில் தொழில்தொடங்க மத்திய அரசு உடனே அனுமதி அளிக்கிறது. பல்வேறு மாநிலங்களும் முதலீட்டாளர்களை ஈர்க்க குழுஅமைத்து செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசும் சீனா உள்பட வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்திற்கு கொண்டுவர குழு அமைத்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...