வெளிமாநிலத் தொழிலாளர்கள் சாலையோர வியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகைகள்

ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு, வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், மத்திய நிதியமைச்சரின் இரண்டாம் கட்ட, பொருளாதார மீட்பு அறிவிப்புகள் அமைந்துள்ளன. சாலையோர வியாபாரிகள், விவசாயிகள், சிறு தொழில் புரிவோருக்கு, சம்பளம், கடன், சலுகைகள் கிடைக்கும் வகையிலும், அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுதும் ஒரே அளவு குறைந்தபட்ச ஊதியம், நடுத்தர வர்க்கத்தினருக்கு மானியத்துடன் வீட்டுக் கடன் உள்ளிட்டவை, அவருடைய அறிவிப்புகளில் இடம் பெற்றுள்ளன. இதைத் தவிர, ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கட்டாயமாக்குவது, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முக்கியமான நடவடிக்கையாகும்.

‘ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சமாளிக்க, 20 லட்சம் கோடி ரூபாயில் திட்டங்கள் அறிவிக்கப்படும்’ என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.அதன்படி,  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாக்குர், இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம், எம்.எஸ்.எம்.இ., எனப்படும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு, நிர்மலா சீதாராமன், 15 அறிவிப்புகளை வெளியிட்டார். இரண்டாம் நாளான நேற்றும், பல்வேறு அறிவிப்புகளை, நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அவர் கூறியதாவது:

இரண்டாம் கட்டத்தில், வெளிமாநிலத் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சுய தொழில் செய்வோர் மற்றும் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு என, ஒன்பது திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. அதில், மூன்று, வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கானது; சாலையோர வியாபாரிகள், சிறு வியாபாரிகள், சுயதொழில் செய்வோருக்கு, தலா ஒரு அறிவிப்பும்; சிறு விவசாயிகளுக்கு இரண்டு; வீட்டு வசதி தொடர்பாக ஒரு திட்டத்தையும் வகுத்துள்ளோம்.

 

இதுவரை செய்தவை

நாடு முழுவதும், மூன்று கோடி எளிய விவசாயிகள், 4.22 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். மத்திய அரசு அறிவித்த, மூன்று மாதங்களுக்கான தவணை நிறுத்தம் வசதியை அவர்களும் பெற்றுள்ளனர்.நாடு முழுதும், 25 லட்சம் புதிய வேளாண் கடன் அட்டைகள் வழங்கப்படும். அதன் மூலம், 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன், விவசாயிகளுக்கு கிடைக்கும்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், நாளொன்றுக்கான, குறைந்தபட்ச ஊதியம், 182 ரூபாயில் இருந்து, 202 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இப்படி, ஒவ்வொரு பிரிவினர் நலனிலும், இந்த அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.கடந்த, இரண்டு மாதங்களில், நகர்ப்புற ஏழைகள், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவிட, தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து, 11,000 கோடி ரூபாய், மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன் மூலம், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு, தங்குமிட வசதி, உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.வீடில்லாதோருக்கு தங்குமிடம் வழங்கும் திட்டத்தின்கீழ், மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது. நாங்கள் வெளிமாநிலத் தொழிலாளர்களை முழுமையாக கவனித்துக் கொள்கிறோம் என்பதற்காக, இதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு மாதங்களில் நடந்தவை

நாடு சுயசார்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். அதற்கு ஒரு சிறந்த உதாரணம், முக கவசங்கள், கிருமி நாசினிகள் தயாரித்தது.

* நாடு முழுதும், 12 ஆயிரம் சுய உதவி குழுக்கள், கடந்த இரண்டு மாதங்களில், மூன்று கோடி முககவசங்கள், 1.2 லட்சம் லிட்டர் கிருமி நாசினி ஆகியவற்றை தயாரித்துள்ளன.

* இதைத் தவிர, நகர்ப்புறங்களில், 7,200 சுய உதவிக் குழுக்கள், புதிதாக துவக்கப்பட்டுள்ளன.

* தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம்.

* தற்போது, 30 சதவீத பிரிவினருக்கு மட்டுமே, குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதை அனைத்து பிரிவினருக்கும், நாடுமுழுதும் விரிவுபடுத்த உள்ளோம்.

* தொழிலாளர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை கட்டாயமாக்கப்பட உள்ளது.

* நாடு முழுவதும், 44 தொழிலாளர் சட்டங்கள், நான்கு சட்டங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சட்டங்கள் எளிய முறையில் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க முடியும்.

* தற்போது சொந்தமாநிலம் செல்லும் வெளிமாநிலத் தொழிலாளர்கள், அங்கு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், பதிவு செய்து கொள்ளலாம்.

இப்படி, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பொருளாதார பாதிப்பில் இருந்து மீட்டெடுக்கும், 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறோம்.

வெளிமாநிலத் தொழிலாளர்கள்

1. வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு, அடுத்த இரண்டு மாதங்களுக்கு, இலவச ரேஷன் வழங்கப்படும்.

ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு, ஒருநபருக்கு, ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும்.

நாடு முழுதும், எட்டு கோடி வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளதாக கணக்கிடப் பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்தவசதி கிடைக்கும். இதற்காக, 3,500 கோடி ரூபாய் செலவிடப்படும்.

2. தொழில்நுட்பத்தின் வசதி, நமக்கு பலபலன்களை அளித்து வருகிறது. ‘ஒரு நாடு; ஒரே ரேஷன் கார்டு’ திட்டம், ஆகஸ்டு மாதம் செயல்படுத்தப்படும்.இதன் மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், அங்கு, ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

இதையடுத்து, 23 மாநிலங்களில், 63 கோடி மக்கள், அதாவது, மொத்த கார்டுதாரர்களில், 83 சதவீதத்தினர் பயன்பெறுவர். அடுத்த ஆண்டு மார்சுக்குள், 100 சதவீதம் நிறைவேற்றப்படும்.

3. ‘பிரதமர் ஆவாஸ் யோஜனா’ என்ற பெயரில், வெளிமாநிலத் தொழிலாளர் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்காக, குறைந்தபட்ச வாடகையுடன் கூடிய, வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும்.

தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள், அருகில் உள்ள காலிஇடங்களில், குடியிருப்புகளை அமைத்து, குறைந்த வாடகைக்கு விடப்படும்.
தனியாருடன் இணைந்து, இது செயல்படுத்தப்படும். மிக விரைவில், இது தொடர்பான விரிவான திட்டம் அறிவிக்கப்படும்.

சிறு வியாபாரிகள்

‘முத்ரா சிசு’ திட்டத்தின் கீழ், சிறு வியாபாரிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. தற்போது மூன்று மாத தவணை நிறுத்தக் காலத்துக்குப் பின், இந்தக் கடனை முறையாக செலுத்துவோருக்கு, 2 சதவீத வட்டி குறைப்பு சலுகை அளிக்கப்படும். அடுத்த, 12 மாதங்களுக்கு, இந்த சலுகை வழங்கப்படும். தற்போதும் மொத்தம், 1.62 லட்சம் கோடி ரூபாய் கடன் பாக்கி உள்ளது. மூன்று கோடி பேர் வரை வாங்கியுள்ளனர். அதன்படி கணக்கிட்டால், 1,500 கோடி ரூபாய் பலன் கிடைக்கும்.

தெருவோர வியாபாரிகள்

தெருவோர வியாபாரிகளுக்காக, 5,000 கோடி ரூபாய் சிறப்பு கடன் உதவி திட்டம் ஒரு மாதத்துக்குள் செயல்படுத்தப் படும். இந்ததிட்டத்தின் கீழ், தெருவோர வியாபாரிகளுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் வரை கடன்கிடைக்கும். 50 லட்சம் தெருவோர வியாபாரிகள், பயன்பெறுவர்.

வீட்டு வசதி

ஆண்டுக்கு, 6 – 18 லட்சம் ரூபாய் வருவாய் உள்ள நடுத்தரவர்க்க மக்களுக்காக, மானியத்துடன் கூடிய வீட்டுக்கடன் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது, இந்தாண்டு மார்ச்சுடன் முடிவடைவதாக இருந்தது. இது, அடுத்த ஆண்டு, மார்ச் வரை நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம், 2.5 லட்சம் குடும்பங்களுக்கு, 70,000 கோடி ரூபாய் பலன் கிடைக்கும். இதன் மூலம், ரியஸ் எஸ்டேட் துறையும் முன்னேற்றம் காணும்.

பழங்குடியினர்

அதிக வேலவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அதன் ஒருபகுதியாக, ‘கேம்பா’ நிதி எனப்படும், காடுகள் நிர்வாகம் மற்றும் திட்டமிடல் திட்டத்தின் கீழ், மாற்று இடங்களில், வனங்கள் உருவாக்கப்படும். இதனால், பழங்குடியினருக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதற்காக, 6,000 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இந்த திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படும்.

விவசாயிகள்

1. ‘நபார்டு’ வங்கி மூலம், விவசாயிகளுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படுகிறது. தற்போது, கூடுதலாக, 30 ஆயிரம் கோடி ரூபாய், அவசர முதலீட்டு நிதியாக வழங்கப்படும். இது ரபி பருவத்துக்கான அறுவடை மற்றும் கரீப் பருவத்துக்கு நிலத்தை தயார்ய்ய உதவும். இது, மூன்று கோடி விவசாயிகளுக்கு பலன் அளிக்கும்.

மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மூலம், இந்தக் கடன், விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படும்.

2. தற்போது, 2.5 கோடி விவசாயிகளிடம், விவசாய கடன் அட்டை இல்லை. அவர்களுக்கும், சலுகை வட்டியுடன், கடன் வழங்கப்படும். மொத்தம், 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.

3. கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத் துறையினர், இத்திட்டத்தின் மூலம் பயன்பெற, அவர்களும், விவசாயிகள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். இது மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...