மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் மிகக்குறைவு-

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி  இருப்பதாவது:- உலகளவில் கொரோனாவுக்கு சுமார் 3 லட்சத்து 21 ஆயிரம் பேர் பலியாகிஉள்ளனர். இது, ஒருலட்சம் மக்கள்தொகையில் 4.1 என்ற விகிதம் ஆகும். ஆனால், இந்தியாவில் 3 ஆயிரத்து 163 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இது, ஒருலட்சம் மக்கள்தொகைக்கு வெறும் 0.2 என்ற விகிதம் ஆகும். எனவே, இந்தியாவில் இறப்பு விகிதம் மிகக்குறைவு.

மற்றநாடுகளை எடுத்துக் கொண்டால், அமெரிக்காவில், ஒருலட்சம் மக்கள் தொகைக்கு 26.6 மரணங்களும், இங்கிலாந்தில் 52.1 மரணங்களும், இத்தாலியில் 52.8 மரணங்களும், ஸ்பெயினில் 59.2 மரணங்களும், பிரான்ஸ் நாட்டில் 41.9 மரணங்களும் நடந்துள்ளன. ஜெர்மனியில் 9.6, சீனாவில் 0.3, ஈரானில் 8.5, கனடாவில் 15.4, நெதர்லாந்தில் 3.3, மெக்சிகோவில் 4 என்ற விகிதங்களில் மரணங்கள் நடந்துள்ளன. இவற்றைவிட இந்தியாவில் குறைவுதான். உரிய நேரத்தில் பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதுதான் இதற்குகாரணம்.

கடந்த ஜனவரி மாதம் ஒரு ஆய்வுக் கூடம் மட்டுமே இருந்தநிலையில், தற்போது 500-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.கடந்த 18-ந் தேதி, ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 233 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 24 லட்சத்து 25 ஆயிரத்து 742 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...