சீனாவின் நோக்கம் போர் அல்ல

எல்லையில் பதைபதைப்பு சீனா உட்பட உலகமே பொருளாதாரத் தேக்கத்தில் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவுடன் எல்லையில் பிரச்சினையைக் கிளப்ப சீனாவுக்கு அப்படி என்ன அவசியம், அவசரம்? மிக முக்கியமான அவசியம் இருக்கிறது. அதுவும் அவசரமாக இருக்கிறது.

கொரானா வைரஸ் உலகமெங்கும் பரவியதற்கு சீனாவின் ரகசியமான ஆய்வுதான் காரணம் என்று உலக நாடுகள் முழுவது சீனா மீது அதீதகோபத்தில் இருப்பதுடன், அந்நாட்டுடனான வணிகத் தொடர்பினை முறித்துக் கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. சில ஆயிரம் நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேற முடிவெடுத்து, பிறநாட்டில் நிறுவனத்தைத் தொடங்க ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இது தொடருமானால், சீனாவின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்குச் சரியும். உள்நாட்டுப் புரட்சிவெடிக்கலாம், சீனா பல நாடுகளாகச் சிதறலாம். இதிலிருந்து சீனா எப்படி தன்னைக் காத்துக்கொள்வது?

சப்ளைசெய்ன் எனப்படும் உலக நாடுகளின் உற்பத்தி மையமாக உயர்ந்துநின்ற சீனா தன் வர்த்தக மண்டலத்தை இழந்தால், அத்தனை கோடி சீனமக்களுக்கு வேலைகொடுக்க முடியாமல் திணறி பெரும் சேதத்தை அடையும் என்பது நிச்சியம். எந்த சூழலிலும் தன்பொருளாதார சந்தையில் யாரையும் உள்ளே அனுமதிக்காத சீனா, தன் அண்டை நாடான தென்கொரியாவுக்கு வெளிப்படையாக, “எங்கள் நாட்டிலிருந்து வெளியே செல்லாதீர்கள். வேண்டுமானால் தென்னாசிய பிராந்தியத்தின் சப்ளைச் செய்னில் நாம் இருவரும் இணைந்து செயல்படுவோம்” என்று அழைப்பு விடும் அளவிற்குப் பரிதவித்துப் போயிருக்கிறது.

என்ன நடவடிக்கை எடுத்தாலும், முதலில் உலக நாடுகளின் கோபம் குறையவேண்டும். அது உடனடியாக நடப்பதாகத் தெரியவில்லை. கால அவகாசம்தேவை. இடைப்பட்ட காலத்தில் சீனாவிலிருந்து வெளியேறும் பிறநாட்டு நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கவே விரும்புகின்றன. அப்படி இந்தியாவில் தொழில் தொடங்க விருக்கும் நிறுவனங்களைக் குழப்பும் / தடுக்கும் வகையில் இந்தியாவுடனான போர் முகாந்திரத்தை உருவாக்க தொடங்கியிருக்கிறது.

இப்படி போர்பதட்டம் நிலவும் நேரத்தில் பெரு நிறுவனங்கள், உடனடியாக இந்தியாவுக்குள் தொழில் தொடங்குவதைக் கொஞ்சம் தள்ளிப் போடக்கூடும். அப்படித் தள்ளிப்போடும் கால அவகாசத்தைப் பயன்படுத்தி அந்த நிறுவனங்களுடன் மீண்டும் மீண்டும் சலுகை ஆசைகள் காட்டித் தன் நாட்டிலேயே தக்கவைத்துக் கொள்ளும் உத்திதான், இப்பொழுது இந்தியாவுடனான மோதலுக்கு முக்கியக் காரணம். இந்தப் பக்கம் போர் பயத்தைக் காட்டிக் கொண்டு அந்தப் பக்கம் நாங்கள் அமைதி விரும்பிகள். போரினை விரும்பவில்லை என்று நிறுவனங்களை நம்பச்செய்து கொண்டிருக்கிறது. என்னவாக இருப்பினும், சீனாவின் ராஜ தந்திரம் தோற்கிறது. இந்தியாவுடனான இந்த மோதல் போக்கு சர்வதேச அரசியலில் சீனாவிற்குப் பெரும் பின்னடைவினையே உருவாக்கி வருகிறது. குறிப்பாக தெற்காசியாவில் வடகொரியாவைத் தவிர மற்ற எல்லா நாடுகளின் வெறுப்பையும் முழுமையாகச் சம்பாதித்துள்ளது.

சீனா ஒருபோதும் எந்தச் சின்ன நாட்டுடணும் போருக்குத் தயாராக இல்லை என்பதும் மீறி போரிட்டால் வெற்றிபெறும் அனுபவமும் அதற்கு இல்லை என்பதும் அதன் போர்க்கள வரலாறு பட்டவர்த்தனமாக நிரூபித்துள்ளது. சீனா பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஜாம்பவன் தான். ஆனால், போர் உத்தியில் வியட்நாம், தாய்வான் அளவிற்குக்கூட கிடையாது. இந்தியாவுடன் போர் தொடுத்தால் சீனாவினா இமயமலை மற்றும் பாகிஸ்தான் பகுதியிலிருந்துதான் தாக்குதல் நடத்த முடியும். ஆனால், இந்தியாவோ, வியட்நாம், பிலிபைன்ஸ், தாய்வான், இந்தோனேசியா உட்பட பல நாடுகளிலிருந்து நேரடியாகத் தாக்குதல் நடத்த முடியும் என்ற விசயம் சீனாவுக்கும் தெரியும்.

ஆகவே, சீனாவின் நோக்கம் போர் அல்ல. தன் நாட்டிலிருந்து வெளியேறும் நிறுவனங்களுடன் சமாதானம் பேச கால அவகாசம் தேவை. அதற்கு இப்பொழுது லடாக் பகுதியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் பாரதமும், ஒருபக்கம் ராணுவ மோதல்களையும், இன்னொரு பக்கம் பொருளாதார உத்திகளையும் வெகு துரிதமாகச் செயல்படுத்தி வருகிறது. சதுரங்க விளையாட்டைக் கண்டு பிடித்ததே பாரதம் தான். நம்மிடமே சதுரங்கம் விளையாடினால் நிச்சியம் சீனாவிற்கு தோல்வி தான். வெற்றி பாரதத்திற்கே!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...