அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெறுவோம்

”அனைவரும் ஒன்றாக இணைந்து செயல் பட்டு, கொரோனாவுக்கு எதிரானபோரில் வெற்றிபெறுவோம்,” என, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மத்தியில் இரண்டாவது முறையாக, பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்று, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஓராண்டில் மத்தியஅரசு செய்துள்ள சாதனைகளை, மக்களிடம் கொண்டு செல்வதற்காக, தமிழக பா.ஜ., சார்பில், ‘காணொளி பேரணி’ நடத்தப்படுகிறது. தினமும் ஒருவர், சமூக வலைதளங்களில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியே உரையாற்று கின்றனர்.

நேற்று, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது: இந்தியா அமைதியான நாடு; அமைதிக்காக பாடுபடுகிற, அமைதியை விரும்புகிறநாடு. ஆனால், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவித்தால், அனுமதிக்க மாட்டோம்.நாட்டின் எல்லையை பாதுகாக்க, ஆயுதங்களை உபயோக படுத்த, ராணுவத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி ஆறுஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சிக்கு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். ஏழைமக்கள் மற்றும் நடுத்தர மக்கள், வாழ்க்கை தரம் மேம்பட நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது.ஐந்து ஆண்டுகளில், 11 கோடி கழிப்பறைகள், நாடுமுழுவதும், துாய்மைப் பாரதம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன. ஆறு ஆண்டுகளில், ஏழைகளுக்கு, எட்டுகோடி காஸ் இணைப்பு உட்பட, 13 கோடி காஸ் இணைப்பு கொடுத்துள்ளோம்.

விறகில் சமைக்கும்போது, புகையில் சிரமப்பட்டனர். நுரையீரல் பாதிக்கப் பட்டது. தற்போது, கொரோனா பாதிப்பு காலத்தில், விறகில் சமைத் திருந்தால், பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பர்.புதிதாக, 38 கோடி வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. வயதுவந்தோர் அனைவரும், வங்கி கணக்கு துவக்கி உள்ளனர். இதனால், உடனடியாக விவசாயிகளுக்கு, அவர்கள் வங்கி கணக்கில், 2,000 ரூபாய் செலுத்த முடிகிறது.

‘ஆயுஸ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ், 15 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். சரியான நேரத்தில், ஊரடங்கை பல்வேறு கட்டங்களாக, பிரதமர் அறிவித்ததால், கொரானோ நோய் அதிகளவில் பரவுவதை, தடுக்க முடிந்தது. மேலும், ஊரடங்குகாலத்தில், தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது.

சென்னை, மும்பை போன்ற நகரங்களில், நோய்பாதிப்பு அதிகமாக உள்ளது. அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றி, அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு, கொரோனாவுக்கு எதிரானபோரில் வெற்றி பெறுவோம் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...