59 செயலிகளுக்கு தடை பொருளாதார ரீதியிலான பெரிய தாக்கு

சீனாவின் 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்து இந்தியா சீனாவிற்கு இருக்கும் செக் வைத்துள்ளது.

டிக்டாக் – TikTok, ஷேர் இட்- Shareit, யுசி பிரவுசர் – UC Browser, ஹெலோ – Helo, எம்ஐ கம்யூனிட்டி – Mi Community, செண்டர் – Xender உள்ளிட்ட சீனாவை சேர்ந்த 59 செயலிகளும்    தடை செய்யப்பட்டுள்ளது

சீனாவிற்கு இதுபெரிய அதிர்ச்சியாக மாறியுள்ளது. லடாக் சண்டை நிலவி வரும் நிலையில் இப்படி சீனாவின் செயலிகள் தடைசெய்யப்பட்டுள்ளது. சீனாவிற்கு எதிரான இந்தியாவின் ஸ்மார்ட் மூவ் இது என்று கூறுகிறார்கள்.

இப்படி செயலிகளை தடைசெய்ததன் மூலம் சீனாவில் பலகோடி இழப்பு ஏற்பட போகிறது. உதாரணமாக டிக்டாக் என்ற செயலிமட்டுமே 100 கோடி பயனாளர்களை உலகம்முழுக்க கொண்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கும் அதிகமான கணக்குகள் இதில் உள்ளது. தடைகாரணமாக இந்த வருமானம் இன்னும் சில நாட்களில் டிக்டாக்கிற்கு இல்லாமல் போகும். இதேபோல் ஷேர் இட் தொடங்கி ஹலோ வரை எல்லா செயலிகளும் மிகமோசமான பொருளாதார சரிவை சந்திக்கும்.

அந்த செயலிகள் மட்டுமின்றி சீனாவின் மொத்த ஜிடிபியும் இதனால் பாதிக்கும். சீனா தனது வருமானத்திற்காக தொழிநுட்ப செயலிகளை பெரியளவில் நம்பி இருக்கிறது. அந்த நாட்டின் ஜிடிபியில் இது நான்காவது பெரியபங்களிப்பை தருகிறது. அதிலும் இந்தியாவின் 100 கோடி பயனாளிகள் சீனாவிற்கு மிகமுக்கியமான சந்தையாக உள்ளது. அதாவது டிக் டாக் மட்டும் வருடத்துக்கு 1 லட்சம் கோடி அளவிற்கு வருவாய் உடையது. இதில் பெரும்பங்கு வகிப்பது இந்திய இவர்கள் சீன செயலிகளை புறக்கணித்தால், அந்த நாட்டில் வளர்ந்துவரும் ஒரு துறையே மொத்தமாக காலியாகும் நிலைமை ஏற்படும்.

இன்னொரு பக்கம் இந்தியா போன்ற பெரியநாடு சீனாவின் செயலிகளை தடைசெய்தால் மற்ற நாடுகளும் சீனாவின் செயலிகளை தடைசெய்ய முன்வரும். சீனா மீது ஏற்கனவே அமெரிக்கா கோபத்தில் இருக்கிறது. இதனால் அமெரிக்காவும் கூட சீனாவின் செயலிகளை தடைசெய்யலாம். ஏற்கனவே தனது தேர்தல் பிரச்சாரம் டிக்டாக் மூலம் நாசமாகிவிட்டதாக டிரம்ப் கோபத்தில் இருக்கிறார்.

அங்கு அதிபர் டிரம்பிற்கு எதிராக டிக்டாக்கில் சீனர்கள் தொடங்கி பலர் மிகதீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனால் அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் டிக் டாக் செயலுக்கு தடைவிதிக்கலாம். அதேபோல் ஆஸ்திரேலியாவில் சீன ஹேக்கர்கள் அடுத்தடுத்து ஹேக்கிங் செய்ததும் பெரிய பிரச்சனையாக உள்ளது. இதனால் ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் சீனாவின் சந்தைமீது கடும் கோபத்தில் இருக்கிறது.

இன்னொரு பக்கம் சீனா இந்திய மக்களின் டேட்டாக்களை திருட முடியாது. இந்தியர்களை டேட்டாக்களை வைத்துதான் இந்திய சந்தையில் தொடர்ந்து சீனா பொருட்களை விற்று வருகிறது. சந்தையை விரிவுபடுத்தி வருகிறது. இது போன்ற செயலிகள் மூலம்தான் இப்படி சீனா தொடர்ந்து இந்தியாவில் டேட்டாக்களை பெற்று சந்தையை விரிவாக்குகிறது. தற்போது அந்த அஸ்திரத்தை இந்தியா உடைத்துள்ளது.

அதேபோல் இதுபோன்ற டேட்டாக்களை வைத்துதான் உலகின் பிறநாடுகளில் ஹேக்கிங் வேலைகளை செய்துவருகிறது. இதை இந்தியா தடுத்துள்ளது. உலகம் முழுக்க இப்படி சீனா தனது செயலிகளை விரிவுபடுத்தி உள்ளது. ஆனால் சீனாவிற்குள் மற்ற நாடுகளின் செயலிகளுக்கு அனுமதி இல்லை. சந்தை என்பது இரட்டைவழியை கொண்டதாக இருக்க வேண்டும். பிறநாட்டில் செயலிகளை விடுவேன், என் நாட்டிற்குள் விடமாட்டேன் என்றுகூறுவது முழுக்க முழுக்க தவறானது. இதனால் சீனாவின் செயலிகளை தடைசெய்தது சரியான முடிவு என்கிறார்கள்.

ஒருநாட்டுக்கு எதிரான போர் என்பது ஆயுதங்களை மட்டும் ஏந்தி கொண்டு செல்லும் போர் கிடையாது. அது வர்த்தக ரீதியாகவும் செய்யப்படலாம். அதேபோல் இப்படி டெக்கினிக்கல் ரீதியாகவும் செய்யப்படலாம். இந்தியா ஆயுதம்இல்லாமலும் மிக மோசமாக தாக்கும் என்று இதன் மூலம் நிரூபித்து இருக்கிறது. சீனாவிற்கு கண்டிப்பாக இது பொருளாதார ரீதியாக பெரியதாக்குதலாக இருக்கும் என்கிறார்கள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...