கறுப்பர்கூட்டம் தலைவன் செந்தில் வாசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கந்த சஷ்டி கவசம் பாடல்பற்றி அவதூறாக கருத்து வெளியிட்ட கறுப்பர்கூட்டம் தலைவன், மற்றும் திமுக ஐடி விங்குடன் தொடர்புடைய செந்தில் வாசனை குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தன. கடவுள்கள் பற்றியும் மோசமான விமர்சனங்கள் அந்தசேனலில் வெளியிடப்பட்டிருந்தன. அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக சார்பில் சென்னை போலீஸ் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு கைதுசெய்தனர். கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலில் வெளியிடப்பட்டிருந்த அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டன. காவல்துறையினரால் தேடப்பட்டுவந்த கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் கடந்த 16 ஆம் தேதி புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.

அதன் பின்னர் அவர் சென்னை போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசனை ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. கந்த சஷ்டி கவசத்தையும் இந்து கடவுள்களையும் அவதூறாக பேசியவர்களையும் குண்டர்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் சுரேந்திரன் மீது நேற்று குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. சென்னை மாநகர காவல் ஆய்வாளர் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சுரேந்திரன் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளா சுரேந்திரன். இந்த நிலையில் செந்தில்வாசன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகிய இருவரும் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டுள்ளதால் ஜாமீனில் வெளிவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திமுககூடாரம் அதிர்ந்து தவிக்கிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...