ரபேல் தெற்காசியாவில் இனி இந்தியாதான் பவர்

ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து புறப்பட்ட, ஐந்து ரபேல் போர்விமானங்கள், ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள, விமானப் படை தளத்துக்கு, நேற்று வந்தடைந்தன. ‘இதன்வாயிலாக, விமானப் படை வரலாற்றில், புதிய சகாப்தம் துவங்கி உள்ளது’.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ‘டசால்ட்’ நிறுவனத்திடம் இருந்து, 59 ஆயிரம்கோடி ரூபாயில், 36 அதிநவீன ரபேல் போர்விமானங்கள் வாங்க, 2016, செப்., 23ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த ஆண்டு அக்டோபரில், நம்ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் சென்றார். அவரிடம், முதல் ரபேல் போர்விமானம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின், மெரிக்னாக் விமானப்படை தளத்தில்இருந்து, ஐந்து ரபேல் போர் விமானங்கள், 27ம் தேதி இந்தியா புறப்பட்டன. ஏழு மணிநேரப் பயணத்துக்குப் பின், ஐக்கிய அரபு எமிரேட்சின், அல் தப்ரா விமானப்படை தளத்தில் தரை இறக்கப்பட்டன. பின், அங்கிருந்து புறப்பட்டு, ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள, நம் விமானப் படை தளத்தை, நேற்று மதியம் வந்தடைந்தன.

பிரான்சில் இருந்து, 7,000 கி.மீ., துாரத்தை கடந்து வந்த போர் விமானங்களுக்கு, வானில், 30 ஆயிரம்அடி உயரத்தில் பறக்கும் போதே, எரிபொருள் நிரப்பப்பட்டன. ரபேல் விமானங்கள், இந்திய வான்வெளியை வந்தடைந்ததும், இரண்டு ‘சுகோய் 30 எம்.கே.ஐ. எஸ்’ போர்விமானங்கள், அவற்றை வரவேற்று அழைத்துவந்தன. வெற்றிகரமாக தரை இறங்கிய விமானங்கள், அம்பாலா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விமானங்களை, நமது விமானப்படையில் சேர்த்துக்கொள்ளும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி, அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப் படை தளத்தில் ரஃபேல் இணைக்கப்பட உள்ளதற்கும், தற்போது லடாக் எல்லையில் சீனாவுடன் நிலவும்பிரச்சினைக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில் இந்த விமானப் படை தளத்திலிருந்து மிக விரைவாக லடாக் எல்லைப்பகுதிக்கு ரபேல் போர் விமானங்கள் பறந்துசென்று ரோந்து சுற்று முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் 12 விமானங்கள் என்ற வீதம் அனுப்பி வைக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் சாராம்சம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை 9 ரஃபேல் விமானங்களை இந்திய விமானப்படையிடம் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஒப்படைத்துள்ளது. கடந்தஆண்டு அக்டோபர் 8ம் தேதி, பிரான்ஸ் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ரபேல் விமானங்களை பெற்றுக்கொண்டு, அவற்றின் சக்கரங்களுக்கு கீழே, எலுமிச்சை வைத்து பூஜை செய்துவிட்டு வந்தார்.

ரஃபேல் போர்விமானம், இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டால், இந்த பிராந்தியத்தில் வேறு எந்தநாட்டிலும் இல்லாத, அதிநவீன விமானமாக, அது விளங்கும்.

ரபேல் விமானம் அதிகபட்சமாக 2,450 கி.மீ வேகத்தில் பறக்ககூடியது. வரும் அக்டோபர் மாதத்தில் இந்த போர் விமானத்தில் பயன்படுத்தக் கூடிய ஆயுதங்கள் இந்தியாவுக்கு வரும். ஆனால் இந்தியாவின் சிறப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரான்ஸ் நாடு தங்களுக்காக உருவாகியுள்ள ஏவுகணைகளை இந்தியாவிற்கு வழங்குகிறது. இது ஏற்கனவே நமதுநாட்டுக்கு வர தொடங்கிவிட்டது.

ரேடாரிலிருந்து தப்பக் கூடிய சிறப்பம்சம் கொண்டது ரபேல் போர்விமானங்கள். வானிலிருந்து தாக்கக்கூடிய ஏவுகணைகள், 120 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் இலக்கை குறிபார்த்து தாக்கக் கூடிய ஏவுகணைகள், சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும் வானில் இருந்தபடி தரையில் உள்ள இலக்குகளை குறிவைத்து தகர்க்ககூடிய ஏவுகணைகள் போன்றவை இதில் அடங்கும். இந்த ஏவுகணைகளை ரபேல்விமானங்களில் பொருத்திக் கொண்டு எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்க முடியும் என்பதால் இந்திய விமானப் படை மிகவும் பலம் பொருந்திய விமான படையாக மாறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...