சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி. நட்டாவை நேற்று நேரில்சந்தித்து பேசினார். இதனையடுத்து பாஜகவில் சேரவில்லை என்றும் அதிரடியாக அறிவித்து திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்தார். இதனையடுத்து திமுக.,விலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார் கு.க. செல்வம். மேலும் அவர்வகித்து வந்த தலைமை நிலைய செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்தும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நீக்கினார். மேலும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஏன் நிரந்தரமாக நீக்கக் கூடாது என்று நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் திமுக தெரிவித்தது.
இந்நிலையில் நேற்றுமாலை சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் நடந்த ராமர்வழிபடும் நிகழ்ச்சிக்கு கு.க.செல்வம் சென்று பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கு.க. செல்வம், “பிரதமர் மோடி, பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா மற்றும் தமிழக பாஜக தலைவர் முருகன் ஆகியோருக்கு நன்றி. நான் சட்டமன்ற உறுப்பினர் என்றமுறையில் அவர்களிடம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு மின்தூக்கி கேட்டேன். தமிழகத்தில் வாரிசு அரசியல் நடக்கிறது. திமுக உட்கட்சி தேர்தலை நடத்தவேண்டும். முருகனை பற்றி தவறாக பேசியவர்களை திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். கட்சியை விட்டு நீக்கினாலும் எனக்கு கவலை இல்லை.” என்று பேசிவிட்டு சென்றார்.
கு.க. செல்வம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யாமல், அதிருப்தி எம்.எல்.ஏ.வாக பாஜகசார்பாக தமிழக சட்டப் பேரவையில் குரல் கொடுக்கும் வகையில் பாஜக திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் கு.க. செல்வத்தைத் தொடர்ந்து தென் மாவட்டத்தைச் சேர்ந்த கோயில்தொகுதி திமுக எம்.எல்.ஏ. பாஜகவில் ஐக்கியமாக போவதாக செய்தி கசிகிறது.
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |