அடுத்த 2 ஆண்டுகளில் வளா்ந்த நாடுகளுக்கு நிகரான சாலை

அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற வளா்ந்தநாடுகளுக்கு நிகராக, இந்தியாவில் தரமான சாலை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா்.

இது குறித்து பிடிஐ செய்தியாளருக்கு அவா் அளித்த பேட்டியில், மேலும் கூறியதாவது:

இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக, பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, புதிதாக அமைக்கப்படும் பசுமை வழிச் சாலைகளில், மின் கம்பிகள், தொலைத்தொடா்பு கேபிள்கள், சமையல் எரிவாயு குழாய்கள் ஆகியவை பதிக்கப்படும். சாலைகள் அமைக்கப்படும்போதே, மின் கம்பிகளை மின்வாரியமும், தொலைத்தொடா்பு கேபிள்களை தகவல் தொடா்புத் துறையும், எரிவாயுக் குழாய்களை எரிசக்தித் துறையும் பொருத்தும்.

நாடுமுழுவதும் முக்கிய சாலைகளில் சுரங்கப்பாதைகளும் பாலங்களும் கட்டப்படும். இதுதவிர, அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.3.10 லட்சம் கோடி செலவில், 7,500 கி.மீ. தொலைவுக்கு 22 பசுமைவழிச் சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

அவற்றில், மும்பையில் இருந்து தில்லிசெல்லும் பசுமைவழிச் சாலை உள்பட 7 சாலைகளுக்கான பணிகள் தொடங்கிவிட்டன. மும்பையில் இருந்து தில்லிவரை 1,320 கி.மீ. தொலைவுக்கு ரூ.1 லட்சம் கோடியில் பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. நாட்டின் மிக நீளமான பசுமை வழி இதுவாகும். இந்தச்சாலைப் பணிகள் நிறைவடைந்தால், மும்பையில் இருந்து தில்லி செல்வதற்கான பயணநேரம், 24 மணி நேரத்தில் இருந்து 13 மணி நேரமாகக் குறையும்.

இதேபோல், மத்தியப் பிரதேசத்தில், ரூ.8,250 கோடியில் சம்பல் விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாலை கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. முதல் முறையாக, மாநிலஅரசுடன் இணைந்து இந்தசாலை அமைக்கப்படுகிறது. இந்தச் சாலைப் பணிகள் முடிவடைந்தால், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான, உத்தரபிரதேச மாநில விவசாயிகள் பெரும் பலனடைவாா்கள்.

ஜம்மு-காஷ்மீரில் ரூ.2,379 கோடியில் உருவாகிவரும் இசட்-மோா் சுரங்கப் பாதைகள் முடங்கியிருந்தது. அந்த திட்ட பணிகளை முடுக்கிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் அந்தச் சுரங்கப்பாதை பணிகள் தொடங்கும். இதேபோல், ஜம்மு-காஷ்மீரில் திட்டமிடப்பட்டுள்ள பிற சுரங்கப்பாதை பணிகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

One response to “அடுத்த 2 ஆண்டுகளில் வளா்ந்த நாடுகளுக்கு நிகரான சாலை”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...