பா.ஜ.க.,வின் அண்ணா நகர் கட்சி அலுவலகத்தை பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தவர், நீட் தேர்வு அச்சத்தால் மரணமடைந்த மாணவர்களுக்கு பிஜேபி மற்றும் என்னுடைய சார்பில் ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் நீட் தேர்வுக்கு ஆதரவுதெரிவிக்கிறேன். குழந்தைகள் கொஞ்சம் தைரியமாக இருக்கவேண்டும். அதுவும் இந்த கொரோனாகாலத்தில் அவர்கள் இன்னும் தைரியமாக இருக்க வேண்டும் என்றார்.
அவர் மேலும் கூறுகையில், மாணவர்கள் இன்று தேர்வு எழுத உள்ளனர். இது அரசியல்பேசும் நேரம் இல்லை. மாணவர்கள் தேர்வு எழுதவேண்டியுள்ளது. 4 ஆண்டுகள் கழித்து நீட் சம்பந்தமாக தற்போது பேசுகிறோம். வருடாவருடம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
நீட் மாநில சுய ஆட்சிக்கு எதிரானதல்ல. திமுக ஆட்சிக்குவந்தால் நீட் தேர்வை ரத்து செய்வதாகச் சொல்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
இந்த நீட் தேர்வு நடந்தபிறகு உட்காந்து பேசலாம். தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் எங்கு நீட்தேர்வுக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. கேரளா மற்றும் கர்நாடகாவில் கொரோனா காலத்திலும் தேர்வுகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளனர். கல்விவணிகமாக மாறியதை உடைக்கத்தான் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது.
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |