பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த தினம் செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. மோடியின் பிறந்ததினத்தை கொண்டாடுவது தொடர்பாக சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்கூறுகையில், “செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகம்முழுதும் மரம் நடும்விழா, அன்னதானம், கொடியேற்றம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்தநிகழ்ச்சிகள் அனைத்து மக்களையும் சென்றுசேரும் விதமாக சேவை வாரமாக கொண்டாட உள்ளோம்.
தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் பங்கேற்க உள்ள ஆன்மீக பேரணியையும் நடத்த உள்ளோம். நீட்விவகாரத்தில் திமுக மாணவர்களை பயமுறுத்துகிறது. மாணவர்களின் தற்கொலை வேதனை அளிக்கிறது. ஆனால், இதில் அரசியல்செய்வது அருவருக்கத்தக்கது செயல். அரசியல் லாபத்துக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் உயிரோடு விளையாடுகிறார். மாணவர்களின் உயிரோடு விளையாடுவதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும். நீட் விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யகூடாது” என்று எல்.முருகன் தெரிவித்தார்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |