பலுஜிஸ்தான் ஹிங்லஜ் மாதா எனும் சக்தி தேவி

ஹிங்லஜ் மாதா எனும் சக்தி தேவி பற்றிய கதை பரசுராமர் காலத்தை சேர்ந்தது. இது பலுஜிஸ்தான் -பாக்கிஜ்தான் எல்லையில் , கராச்சி நகரில் இருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ளது.

திரேதா யுகத்தில் பரசுராமர் அவதாரம் எடுத்த காலத்தில் ஆலயம் உள்ள பகுதியை உள்ளடக்கிய தேசத்தை விச்தார்

என்ற மன்னன் ஆண்டு வந்தானாம்;. அவருக்கு ஹிங்கோல் மற்றும் சுந்தர் என்ற இரு மகன்கள் உண்டு. சுந்தர் பதவி ஏற்றதும் அண்டை நாடுகளில் படையெடுத்து அவர்களது பொருட்களைக் கொள்ளையடித்து அங்கிருந்த மக்களுக்கு சொல்ல முடியாதத் துயரங்களைத் தர அங்கிருந்த மக்கள் தம்மை காத்தருளுமாறு சிவபெருமானை வேண்டினார்கள்.

ஆகவே தன் மகன் வினாயகரை அனுப்பி சுந்தரை அழித்தார். அதனால் கோபமுற்ற சுந்தரின் சகோதரன் ஹிங்கோல் கடுமையான தவத்தில் அமர்ந்து கொண்டு சிவனிடமே தன்னை எளிதில் அழிக்க முடியாத வரத்தைப் பெற்றான். அந்த வரத்தின்படி அவனை மூவுலகிலும் உள்ள எந்த ஆயுதத்தினாலும் மற்றும் மனிதர்கள், ஜீவராசிகள், மிருகங்கள் என எவராலும் அழிக்க முடியாது. சூரிய ஒளியே புக முடியாத இடத்தில்தான் அந்த வரம் பலிக்காது, அவனுக்கும் மரணம் வர முடியும்.

அந்த வரங்களைப் பெற்றவன் கொடுமையான ஆட்சியைத் தொடர்ந்தான். தன்னையே கடவுள் எனக் கூறிக் கொண்டான். அவனுடைய கொடுமையை தாள முடியாமல் போன மக்கன் சிவபெருமானின் மனைவியான சக்தியை துதித்து யாகம் செய்து அவளிடம் அவனை அழிக்குமாறு வேண்டினர். அவளும் அந்த கொடுங்கோலனை அழிப்பதாகக் கூறிய பின் தற்போது பலு+ஜிஸ்தானில் உள்ள மலைக் குகையில் மறைந்து கொண்டாள்.

அவளை அழிக்கப் பின் தொடர்ந்து சென்றவனை அந்த தேவி சூரிய ஒளியே புக முடியாத அந்த குகைக்குள்ளேயே கூர்மையான மரக் கட்டையினால் அங்கேயே அவனை குத்திக் கொன்றாள். ஆகவே அந்த குகையிலேயே அந்த தேவிக்கு ஆலயம் அமைந்தது. அது ஹிங்லஜ்; என்ற நதிக்கு அருகில் இருந்ததாலும், ஹிங்கோலனைக் கொன்று துயர் தீர்த்தாலும் ஹிங்லஜ் மாதா என்ற பெயர் பெற்றாள்.

மேலும் தஷ்ய யாகத்தில் மரணம் அடைந்த் தன் மனைவியின் உடலை தூக்கிக் கொண்டு உலகம் முழுவது; பயங்கர நடனம் ஆடிக் கொண்டு சென்றபோது அவர் கோபத்தை அடக்க பார்வதியின் இறந்த உடலை 51 துண்டுகளாக விஷ்ணு வெட்டிப் போட்டபோது அது பல இடங்களில் விழுந்து சக்தி ஆலயங்கள் தோன்றின. அதில் ஒன்று விழுந்த இடமே ஹிங்லஜ் ஆலயம் உள்ள இடம் என்றும் கதை உண்டு.

{qtube vid:=2rTxpsTgKJ4}

 

நன்றி சாந்திப்பிரியா 

Tags; பலுஜிஸ்தான்,  ஹிங்லஜ்  மாதா,  சக்தி தேவி, பாகிஸ்தான்  இந்து கோவில் , பாகிஸ்தானில்  உள்ள  இந்து கோயில்கள்,பாகிஸ்தானில்  இந்து கோயில்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...